ஆண்: பிரியசகி 
பிரியசகி.... 
வருவேன் வாசல் தேடி 
வருத்தம் ஏனடி 
தருவேன் பாடல் கோடி 
தனிமை ஏதடி 
இளைய தேகம் ஓ 
இணைய வேண்டும்.... 
பெண் : பிரியசகி நான் பிரியசகி 
பிரியசகி உன் பிரியசகி 
வருவாய் வாசல் தேடி 
வருந்தும் பூங்கொடி 
தருவாய் பாடல் கோடி 
தவிக்கும் பைங்கிளி 
இளைய தேகம் ஓ 
இணைய வேண்டும் 
இனிய ராகம் ஓ 
புணைய வேண்டும் 
ஆண்: பிரியசகி ஓ பிரியசகி 
பெண் : காதலன் வீரமிகு 
ஆண்மகன் ஆண்மகன் 
காவலை மீறிவரும் 
நாயகன் நாயகன் 
காதலன் வீரமிகு 
ஆண்மகன் ஆண்மகன் 
காவலை மீறிவரும் 
நாயகன் நாயகன் 
ஆண்: பார்வை ஒன்று 
காட்டு கண்மணி 
பூமி தன்னைக் கையில் ஏந்துவேன் 
வார்த்தை ஒன்று பேசு பொன்மணி 
மேகம் போல வானில் நீந்துவேன் 
பெண் : வானமும் வையமும் 
வாழ்த்துமே ஓ 
ஆண்: பிரியசகி ஓ பிரியசகி 
பிரியசகி ஓ பிரியசகி 
பெண் : கூண்டிலே காதல் 
குயில் வாடுது பாடுது 
கொண்டுப்போ கூவி 
உனைத் தேடுது தேடுது 
கூண்டிலே காதல் 
குயில் வாடுது பாடுது 
கொண்டுப்போ கூவி 
உனைத் தேடுது தேடுது 
ஆண்: வெண்ணிலாவை 
சிறையில் வைப்பதா 
வானம் என்ன வெளியில் நிற்பதா 
வீரமான நெஞ்சமில்லையா 
நெஞ்சில் இந்த வஞ்சியில்லையா 
பெண் : நீ வரும் பாதையைப் 
பார்க்கிறேன் ஓ.. 
பிரியசகி நான் பிரியசகி 
பிரியசகி உன் பிரியசகி 
ஆண்: வருவேன் வாசல் தேடி 
வருத்தம் ஏனடி 
தருவேன் பாடல் கோடி தனிமை 
ஏதடி 
பெண் : இளைய தேகம் ஓ 
இணைய வேண்டும் 
ஆண்: இனிய ராகம் ஓ 
புணைய வேண்டும் 
பெண் : பிரியசகி நான் பிரியசகி 
ஆண்: பிரியசகி ஓ பிரியசகி 
Thank You - Prakash 31.