திரைப்படம்: "ஒரு ஊதாப்பூ
கண்சிமிட்டுகிறது";
ரிலீஸ்: ஜூன் 04th 1976;
இசை: வி.தட்சிணாமூர்த்தி;
பாடல் வரிகள்: கண்ணதாசன்;
Created by for you
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல்
வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல்
வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
Created by
பூவுலகின் லட்சியங்கள்
பூப்போன்றே வாடும்
பூவுலகின் லட்சியங்கள்
பூப்போன்றே வாடும்
தெய்வ சொர்க்க நிச்சயம்தான்
திருமணமாய் கூடும்
பொருத்தம் என்றால் புதுப்பொருத்தம்
பொருந்திவிட்ட ஜோடி
பொருத்தம் என்றால் புதுப்பொருத்தம்
பொருந்திவிட்ட ஜோடி
நான் புலவனென்றால்
பாடிடுவேன் கவிதை ஒரு கோடி
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல்
வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
Created by
மண வாழ்க்கை அமைவதற்கோ
மனைவி வாய்க்க வேண்டும்
மண வாழ்க்கை அமைவதற்கோ
மனைவி வாய்க்க வேண்டும்
குலமகளாய்க் கிடைப்பதற்கோ
கொடுத்து வைக்க வேண்டும்
அருமைகளும் பெருமைகளும்
நிறைவதுதான் இன்பம்
அருமைகளும் பெருமைகளும்
நிறைவதுதான் இன்பம் நீ
அத்தனையும் பெற்றுவிட்டாய்
ஆனந்தமாய் வாழ்க
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல்
வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க by