பரந்திருக்கும் கரு நீல வானம்
அதில் தெரியும் உந்தன் முகம்
உறங்கும் என்னை எழுப்பி உதட்டில்
முத்தம் இடுகிறதே
காதலை முணுமுணுத்திடும்
உந்தன் குரல் உந்தன் வாசம்
தினமும் எனக்குள் ஒலிக்கும்
நீ எங்கே இருக்கின்றாய்
தொட முடியா கரு நீல வானம்
அதில் தெரியும் உந்தன் பிம்பம்
சோகத்தில் இருந்து என்னை மீட்டு
ஓவியம் செய்கிறதே
மன்னிப்பாயா உன்னை பிடித்தேன்
தூரம் செல்லாதே உன்னை அழைக்கின்றேன் உன்னை காண இய லா சோகத்தினால்
என் கண்கள் வேற்கிறதே