பெ: ஊ ஊ …..
ஆ: மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
பெ: இது முதல் உறவு…
இது முதல் கனவு..
ஆ: இந்த திருநாள்..
பெ: தொடரும்...
ஆ: தொடரும்...
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
பெ: ஊ ஊ …..
ஆ: ஆடுவது பூந்தோட்டம்
தீண்டுவது பூங்காற்று
பெ: ஆசை கிளிகள்
காதல் குயில்கள்
பாடும் மொழிகள் கோடி
ஆ: ஆடி புனலில்... காவிரி ஓடிடும் வேகம்
பெ: அடிக்கின்ற பசுங்கொடிகள் ஒன்றாக
வடிக்கின்ற புது கவிகள்
ஊ ஊ …..
ஆ: மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
பெ: இது முதல் உறவு…
இது முதல் கனவு..
ஆ: இந்த திருநாள்..
பெ: தொடரும்...
ஆ: தொடரும்...
பெ: வீணையென நீ மீட்டு
மேனிதனில் ஓர் பாட்டு
ஆ: மேடை அமைத்து
மேளம் இசைத்தால்
ஆடும் நடனம் கோடி
பெ: காலம் முழுதும் காவியம் ஆனந்தம் ராகம்
ஆ: இனி எந்த தடையும் இல்லை
என்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை
பெ: ஊ ஊ …..
ஆ: மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
பெ: இது முதல் உறவு…
இது முதல் கனவு..
ஆ: இந்த திருநாள்..
பெ: தொடரும்...
ஆ: தொடரும்...
பெ: ஊ ஊ …..
ஊ ஊ...