ஆண்: சின்னவளை
முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொள்வேன்
கரம் தொட்டு
சின்னவளை
முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொள்வேன்
கரம் தொட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன்
வளையிட்டு
( இசை )
பெண்: வந்தவளை
கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய்
வளையிட்டு
வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய்
வளையிட்டு
பூங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு
ஆண்: தூயவளை
நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
தூயவளை
நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை
சுகம் பட்டால் பட்டால் படியும்
பெண்: கன்னம் மாதுளை
கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
கன்னம் மாதுளை
கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
இரு கண்ணால் சொன்னால்
பக்கம் வந்தால் தந்தால்
நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ
வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய்
வளையிட்டு
ஆண்: என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன்
வளையிட்டு
பெண்: வான மழை போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறக்கும்
வான மழை போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறக்கும்
நீ அவளை விட்டுப் போகும் வரை
அது இங்கே இங்கே இருக்கும்
ஆண்: மின்னும் கை வளை
மிதக்கும் பெண்களை
அசைத்தால் அசையாதோ
மின்னும் கை வளை
மிதக்கும் பெண்களை
அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று
பெண்மை கெஞ்சும் வரை
சுவைத்தால் சுவைக்காதோ
பெண்: வந்தவளை
கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொண்டாய் வளையிட்டு
பூங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு
ஆண்: சின்னவளை
முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொண்டேன்
கரம் தொட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொண்டேன்
வளையிட்டு