menu-iconlogo
logo

Nilavum Malarum

logo
Letras
இசை : ஏ எம் ராஜா

பாடியவர்கள் : ஏ எம் ராஜா பி சுசீலா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால்

ஜாடை பேசுது....

பெண் : நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால்

ஜாடை பேசுது...

பெண் : சிரித்து சிரித்து உறவு வந்தால்

நிலைத்து வாழுமா...

ஆண்: மனம் துடித்து துடித்து

சேர்ந்த பின்னே

தோல்வி காணுமா...

சிரித்து சிரித்து உறவு வந்தால்

நிலைத்து வாழுமா...

பெண்: தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால்

காதல் மாறுமா..

இருவர்: மனதினிலே பிரிவுமில்லை

மாற்றுவாரில்லை...

நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்

காணம் பாடுவோம்...

இருவர்: நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால்

ஜாடை பேசுது..

ஆண் : முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால்

பார்க்க முடியுமா...

பெண் : இன்று பார்த்து பார்த்து

முடித்துக்கொண்டால்

நாளை வேண்டுமே..

முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால்

பார்க்க முடியுமா...

ஆண் : கணை தொடுத்து தொடுத்து

மிரட்டும் கண்ணால்

பார்க்கலாகுமா..

இருவர் : மலர்முடிப்போம் மணம் பெறுவோம்

மாலை சூடுவோம்...

நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்

காணம் பாடுவோம்...

இருவர்: நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால்

ஜாடை பேசுது..

Nilavum Malarum de A. M. Rajah/P. Susheela - Letras y Covers