menu-iconlogo
logo

Maasilaa Unmai Kaathalae

logo
Letras
உங்களுக்கு அளவில்லா

செல்வம் கிடைத்து விட்டது

இனி வாழ்த்துகளும் வரவேற்புகளும்

ஆமாம் சாமிகளும் வந்து குவியும்

உலகத்து அழகிற்கும் செல்விகளும்

உங்களை அறிமுகம் செய்ய காத்திருப்பார்கள்

இப்போது நீங்கள் என்னிடம் படிக்கும்

காதல் காவியம் அப்போது

ஏடு ஏடாக காற்றில் பறக்கும்

M - மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

F- பேசும் வார்தை உண்மைதானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

பேசும் வார்தை உண்மைதானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

M - கண்ணிலே மின்னும் காதலை

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

M - நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே

F - நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

M - நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே

F - நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

F - பேசும் வார்தை உண்மைதானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

மாசிலா உண்மை காதலே

மாறுமா செல்வம் வந்த போதிலே

M - கண்ணிலே மின்னும் காதலை

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

M - உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

F - இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

M - உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

F - இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

M/F - அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்

இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

M/F - அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்

இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

M/F - மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே…

மாறுமோ…………