menu-iconlogo
logo

Thanimaiyile Inimai Kaana

logo
Letras
ஆ : தனிமையிலேஏஏஏ

தனிமையிலேஏஏ..

தனிமையிலே இனிமை

காண முடியுமா

பெ: நள்ளிரவினிலே

சூரியனும் தெரியுமாஆ

தனிமையிலே இனிமை

காண முடியுமாஆஆ

ஆ : துணை இல்லாத

வாழ்வினிலே சுகம் வருமாஆஆ

பெ :அதை சொல்லி சொல்லி

திரிவதனால் சுகம் வருமாஆஆ

ஆ : துணை இல்லாத

வாழ்வினிலே சுகம் வருமாஆஆ

பெ : அதை சொல்லி சொல்லி

திரிவதனால் சுகம் வருமா

மனமிருந்தால்

வழியில்லாமல் போகுமாஆஆ

மனமிருந்தால்

வழியில்லாமல் போகுமாஆஆ

வெறும் மந்திரத்தால்

மாங்காய் விழுந்திடுமாஆஆ

ஆ : தனிமையிலேஏஏ

தனிமையிலே

இனிமை காண முடியுமா

பெ: நள்ளிரவினிலே

சூரியனும் தெரியுமாஆஆ

தனிமையிலே

இனிமை காண முடியுமாஆஆ

பெ : மலரிருந்தால் மணமிருக்கும்

தனிமை இல்லை

செங்கனியிருந்தால் சுவையிருக்கும்

தனிமை இல்லை

மலரிருந்தால் மணமிருக்கும்

தனிமை இல்லை

செங்கனியிருந்தால் சுவையிருக்கும்

தனிமை இல்லை

ஆ : கடல் இருந்தால் அலை

இருக்கும் தனிமை இல்லை

கடல் இருந்தால் அலை

இருக்கும் தனிமை இல்லை

நாம் காணும் உலகில் ஏதும்

தனிமை இல்லை

தனிமையிலேஏஏ

தனிமையிலே

இனிமை காண முடியுமாஆஆ

பெ: நள்ளிரவினிலே

சூரியனும் தெரியுமாஆஆ

தனிமையிலே இனிமை

காண முடியுமாஆஆ

பெ: பனி மலையில்

தவமிருக்கும் மாமுனியும்

கொடி படையுடனே

பவனி வரும் காவலனும்

கவிதையிலே நிலை

மறக்கும் பாவலனும்

கவிதையிலே நிலை மறக்கும்

பாவலனும்

இந்த அவனியெல்லாம்

போற்றும் ஆண்டவன் ஆயினும்

ஆ: தனிமையிலேஏஏ

தனிமையிலே

இனிமை காண முடியுமாஆஆ

பெ: நள்ளிரவினிலே

சூரியனும் தெரியுமாஆஆ

இருவரும்: தனிமையிலே

இனிமை காண முடியுமாஆஆ