பெ: சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா
என்ன சொக்க வெச்சு எட்டி நிக்கலாமா
வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா
நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா
பெ: ஏய்.. சொக்குப் பொடி
வச்சிருக்கேன் மாமா
என்ன சொக்க வெச்சு எட்டி நிக்கலாமா
அட️வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா
நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா
ஆ: எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே
பெ: ஹங்
ஆ: இல்ல எக்க சக்கம் ஆகிப் போகும் தானே
பெ: அஹான்
ஆ: உள்ளதெல்லாம் சொல்லிபுட்டேன் நானே
அட ஊடல் என்ன கூடல் என்ன மானே..
பெ: ஹேய்.. சொக்குப் பொடி
வச்சிருக்கேன் மாமோ.....ஓ....ஓ...
பெ: நீ தானே நெஞ்சத்துல
நேசத்தையும் பாசத்தையும் ஏத்தி வெச்ச
பூப்போல பெண் மனச
பொல்லாத ஆசையில மாத்தி வெச்ச
ஆ: பெண் பிள்ள நாணம் விட்டா
கன்னித் தமிழ் நாட்டுக்கது ஆகாதம்மா
கண் மூடி ஆச வெச்சா
காளை மனம் காவலத்தான் தாண்டாதம்மா
பெ: தானா கனிஞ்ச கனிதான்
இப்ப நீயும்.. நானும் தனிதான்..
ஆ: ஏம்மா வெட்டிக் கதைதான்
அட எதுக்கு.. இந்த வழிதான்..
பெ: இஷ்டப் பட்டு நெருங்க
இந்த மனம் கெறங்க
எட்டு வெச்சு வந்ததையா உம் மடியில் உறங்க
ஆ: எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே
பெ: ஹ்ம்க்
ஆ: இல்ல எக்க சக்கம் ஆகிப் போகும் தானே
பெ: பரவாயில்ல
ஆ: உள்ளதெல்லாம் சொல்லிபுட்டேன் நானே
பெ: ஹ்க்கும்
ஆ: அட ஊடல் என்ன கூடல் என்ன மானே
பெ: ️️சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா
ஆ: ஹா..
பெ: என்ன சொக்க வெச்சு எட்டி நிக்கலாமா...
ஆ: அய்யோ
பெ: வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா
நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா
ஆ: அய்யய்யய்ய எட்டிக் கொஞ்சம்
தள்ளி நில்லு மானே......ஏ...ஏ...
பெ: தனியாக நான் படுத்தா
ஹ்..தொந்தரவு பண்ணுதையா ஒன் நெனப்பு
என நீங்க ஆதரிச்சா
விட்டு விட்டு ஓடுமையா என் தவிப்பு..
ஆ: அறியாத சின்னப் பொண்ணு
அச்சம் கொஞ்சம் நாணம் கொஞ்சம் வேணுமம்மா
புரியாத மோகத்துல புத்தி
தடுமாறி விடக் கூடுமம்மா..
பெ: நீ தான் ஏன் மாப்பிள்ளை
ஏந்து... என்ன தோளுல..
ஆ: சொன்னா நீயும் கேட்க்கல
இப்ப சூடு.. வெப்பேன் நாக்குல..
பெ: மல்லியப் பூ மணக்க
உள்ள கதை இனிக்க
மத்த கதை என்னத்துக்கு வித்தைகள படிங்க
சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா..
என்ன சொக்க வெச்சு எட்டி நிக்கலாமா
ஆ: ஹ்ம்...
பெ: ️வெக்கத்துக்கு ️வேலை இல்ல மாமா
நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா
ஆ: எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே
பெ: ஹ்ம்க்
ஆ: இல்ல எக்க சக்கம் ஆகிப் போகும் தானே
பெ: போட்டுமே..
ஆ: உள்ளதெல்லாம் சொல்லிபுட்டேன் நானே
பெ: ️️
ஆ: அட ஊடல் என்ன கூடல் என்ன மானே
பெ: ஏய் சொக்குப் பொடி வச்சிருக்கேன்
மாமா...ஹா...ஹா...ஏய்...