menu-iconlogo
logo

Va Va En Veenaiye

logo
Letras
M: வா வா என் வீணையே... F: ன ன நா

M: விரலோடு கோபமா... F: ன ன நா

மீட்டாமல் காதல் ராகம்

யாவும் விளைந்திடுமா...

கிள்ளாத முல்லையே... காற்றோடு கோபமா...

இளந்தென்றல் தேடும் போது

ஊடலாகுமா...ஆ...ஆ...

வா வா என் வீணையே... F: ன ன நா

விரலோடு கோபமா... F: ன ன ன ன நா

F: தண்டோடு தாமரை ஆட...

வண்டோடு மோகனம் பாட...

நான் பார்க்கையில் நெஞ்சிலே

உந்தன் ஞாபகம் கூட...

தண்டோடு தாமரை ஆட...

வண்டோடு மோகனம் பாட...

நான் பார்க்கையில் நெஞ்சிலே

உந்தன் ஞாபகம் கூட...

M: துணை தேடுதோ தனிமை...

துயர் கூடுதோ...

F: அணை மீறுதோ உணர்ச்சி...

அலை பாயுதோ...

M: நாள்தோறும் ராத்திரி

வேளையில் ரகசிய பாஷை பாட...

F வா வா உன் வீணை நான்... M: ன ன நா

விரல் மீட்டும் வேளைதான்... M: ன ன நா

மீட்டாமல் காதல் ராகம் யாவும்

விளைந்திடுமோ...ஓ...ஓ...

கிள்ளாத முல்லையே...

வந்தாள் உன் எல்லையே...

இளந்தென்றல் தேடும் போது

ஊடலாகுமோ...ஓ...ஓ...

M: சந்தோஷ மந்திரம் ஓத...

சந்தர்ப்பம் சாதகம் ஆக...

நாள் பார்ப்பதோ இன்னமும்

இன்ப நாடகம் போட...

சந்தோஷ மந்திரம் ஓத...

சந்தர்ப்பம் சாதகம் ஆக...

நாள் பார்ப்பதோ இன்னமும்

இன்ப நாடகம் போட...

F: இரவாகலாம்... இளமை அரங்கேரலாம்...

M: உறவாடலாம் இனிய ஸ்வரம் பாடலாம்...

F: கேட்காத வாத்திய ஓசைகள்

கேட்கையில் ஆசைகள் தீரும்...

M: வா வா என் வீணையே... F: ல ல லா...

M: விரலோடு கோபமா... F: ல ல லா...

F: மீட்டாமல் காதல் ராகம் யாவும்

விளைந்திடுமோ...ஓ...ஓ...ஓ...

M: கிள்ளாத முல்லையே... காற்றோடு கோபமா...

F: இளம் தென்றல் தேடும் போது

ஊடலாகுமோ...ஓ...ஓ...ஓ...

M: வா வா என் வீணையே... F: ல ல லா...

M: விரலோடு கோபமா... F: ல ல லா...

F: வா வா உன் வீணை நான்... M: ல ல லா...

F: விரல் மீட்டும் வேளைதான்...

M: ல ல லா... ல ல ல ல லா