menu-iconlogo
logo

Ponmagal Vanthaal

logo
Letras
திரைப்படம்: சொர்க்கம் வெளியானஆண்டு: 1970

நடிகர்: நடிகர்திலகம் சிவாஜிகணேசன்

பாடகர்1: பொன்மகள் வந்தாள்

பொருள்கோடி தந்தாள்

பூமேடை வாசல்பொங்கும் தேனாக

பாடகர்2:கண்மலர் கொஞ்சும் கனிவோடுஎன்னை

ஆளாக்கினாள் அன்பிலே

இருவரும்:பொன்மகள் வந்தாள்

பொருள்கோடி தந்தாள்

பூமேடை வாசல்பொங்கும் தேனாக

(இசை)

பெ குழு ஆ... ஆ... ஆ...

பாடகர்: டி.எம்.சௌந்தரராஜன்

பாடலாசிரியர்: ஆலங்குடி சோமு

பெ குழு லலலல லலலல லலலல

பாடகர்1:முத்துகள் சிரிக்கும் நிலத்தில்

தித்திக்கும் நினைப்பை விதைக்கும்

முத்துகள் சிரிக்கும் நிலத்தில்

தித்திக்கும் நினைப்பை விதைக்கும்

பாவை நீ வா

பாடகர்2:சொர்கத்தின் வனப்பை ரசிக்கும்

சித்தத்தில் மயக்கம் வளர்க்கும்

யோகமே நீ வா

பாடகர்1: வைரமோ என்வசம் வாழ்விலே பரவசம்

பாடகர்2:வீதியில் ஊர்வலம்

விழி எல்லாம் நவரசம்

இருவரும்:பொன்மகள் வந்தாள்

பொருள்கோடி தந்தாள்

பூமேடை வாசல் பொங்கும் தேனாக

(இசை)

பெண்கள்குழு லல்ல லலலலலா...லால்லா லலலலலா

லாலாலா... லாலாலா... லாலாலா... லாலாலா...

இசையமைப்பாளர்: எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடகர்2:செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்

வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்

செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்

வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக

பாடகர்1:இன்பத்தின் மனதில் குளிப்பேன்

என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக

பாடகர்2:திருமகள் சம்மதம்

தருகிறாள் என்னிடம்

பாடகர்1:மனதிலேநிம்மதி மலர்வதோ புன்னகை

பொன்மகள் வந்தாள்

பொருள்கோடி தந்தாள்

பூமேடை வாசல் பொங்கும் தேனாக

பெண்கள் குழு: ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ... (இணைந்து)

பாடகர்2:கண்மலர் கொஞ்சும் கனிவோடு என்னை

ஆளாக்கினாள் அன்பிலே

இருவரும்:பொன்மகள் வந்தாள்

பொருள்கோடி தந்தாள்

பூமேடை வாசல் பொங்கும் தேனாக

பெண்கள் குழு: ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ... (இணைந்து)

(இசை)

இந்த காலத்தால்அழியாத

இனியபாடலைத்தேர்தெடுத்து பாடியமைக்கு

மிக்கநன்றி உங்கள்

Ponmagal Vanthaal de M. S. Viswanathan/T. M. Soundararajan - Letras y Covers