menu-iconlogo
huatong
huatong
avatar

Kappalukku Pona Machan

PVSingshuatong
🎶PVSings🎶huatong
Letras
Grabaciones
கப்பலுக்கு போன மச்சான் - Kappalukku Pona Machan - PVSings

கணவரை பிரிந்து இருக்கும் மனைவியின்

கவலையை விளக்கும் அழகான பாடல்

பாடகர்கள்: நீங்கதான்

பாடல் வரிகள்: நாகூர் சலீம்

இசை: அப்துல் ரஹ்மான்

தமிழ் வரிகளுடன்

HQ Track வழங்குவது

PVSings / PaadumVanambaadi

(இசை) Track by PVSings

(F) கப்பலுக்கு போன மச்சான்..

கண் நிறைஞ்ச ஆசை மச்சான்..

கப்பலுக்கு போன மச்சான்..

கண் நிறைஞ்ச ஆசை மச்சான்..

எப்பத்தான் வருவிங்க, எதிர்பார்கிறே..ன்

நான் இரவும் பகலும்

தொழுது தொழுது கேட்கிறேன்..

(M) கண்ணுக்குள்ள வாழ்பவேளே..

கல்புக்குள்ளே ஆள்பவளே..

கண்ணுக்குள்ள வாழ்பவேளே..

கல்புக்குள்ளே ஆள்பவளே..

இன்ஷா.. அல்லா, திரும்ப வருவேன்..

உன் இஷ்டம் போல

நெனச்சதெல்லாம் தருவேன்..

(இசை) Track by PVSings

(F) அக்கரைக்கு போனதுமே..

அக்கறையும் போயுடுச்சோ..

அன்று சொன்ன வார்தைகளின்..

அர்தங்களும் மாறிடுச்சோ..

சர்க்கரை மேல் கோபப்பட்டு..

கட்டெறும்பும் ஓடிடுச்சோ..

சங்கதி தெரியலையே..

மன்னன் மனம் வாடிடுச்சோ..

கப்பலுக்கு போன மச்சான்..

கண் நிறைஞ்ச ஆசை மச்சான்..

எப்பதான் வருவிங்க, எதிர்பார்கிறே..ன்

நான் இரவும் பகலும்

தொழுது தொழுது கேட்கிறேன்..

(இசை) Track by PVSings

(M) அன்னமே அடிக் கரும்பே..

ஆவல் என்னை மீறுதடி..

அன்னமே அடிக் கரும்பே..

ஆவல் என்னை மீறுதடி..

எண்ணெய் கிணறு போலே

எண்ணம் எல்லாம் ஊறுதடி

உன்னை அங்கு விட்டு வந்து

உள்மனசு வாடுதடி

உள்ளபடி சொன்னாக்கா..

உயிர் அங்கு வாழுதடி

கண்ணுக்குள்ள வாழ்பவேளே..

கல்புக்குள்ளே ஆள்பவளே..

இன்ஷா.. அல்லா, திரும்ப வருவேன்..

உன் இஷ்டம் போல

நெனச்சதெல்லாம் தருவேன்..

(இசை) Track by PVSings

(F) துபாயிக்கு பயணம் போயி..

வருசம் ஆறாச்சு..

துள்ளி வரும் காவிரி போல்..

கண்ணு ரெண்டும் ஆறாச்சு..

ஏக்கத்திலே நான் இங்கே..

தூங்கி ரொம்ப நாளாச்சு..

தாயகம் வந்துடுங்க..

பக்கத் துணை நானாச்சு.

(M) பாலை நிலம் எல்லாமே..

சோலை வனம் ஆகுதடி..

பாய்கிறது நீராக..

மச்சானின் வேர்வையடி..

பாடுபட்டு சேர்க்கிறது.

பைங்கிளியே எதுக்கடி..

பாவை உனக்கில்லாம..

பாரிலே யாருக்கடி..

கண்ணுக்குள்ள வாழ்பவேளே..

கல்புக்குள்ளே ஆள்பவளே..

இன்ஷா.. அல்லா, விரைவில் வருவேன்..

உன் இஷ்டம் போல

நெனச்சதெல்லாம் தருவேன்..

(இசை) Track by PVSings

(F) துல்ஹஜ்ஜூ மாசத்திலே..

கடிதம் ஒண்ணு போட்டீங்க..

நலமா சுகமானு..

பாசம் வச்சு கேட்டீங்க..

இங்கெனக்கு என்ன குறை..

கோடி மனை பஞ்சமில்லை..

இருக்கிறேன் நாயகனே..

இன்னும் நான் சாகவில்லை..

(M) ஈச்சமர தோப்புக்குள்ளே..

எழுந்தாச்சு கட்டிடமே..

ஈரைந்து மாசத்திலே..

தீர்ந்து விடும் ஒப்பந்தமே..

ஆச்சிது ஒருவாரு..

அன்பு நகை பெட்டகமே..

ஆக்கப் பொறுத்தவளே..

ஆறப் பொறு ரத்தினமே..

ஆக்கப் பொறுத்தவளே..

ஆறப் பொறு ரத்தினமே..

கண்ணுக்குள்ள வாழ்பவேளே..

கல்புக்குள்ளே ஆள்பவளே..

இன்ஷா.. அல்லா, திரும்ப வருவேன்..

உன் இஷ்டம் போல

நெனச்சதெல்லாம் தருவேன்..

Brought to you by PVSings/PaadumVanambaadi

Thanks for using my Track!

Más De PVSings

Ver todologo