பெ: மாமா ஒனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
பெ: மாமா ஒனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
ஆ: மானே ஒனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு..
ஆ: அஞ்சி விரல் ஓயாம
கெஞ்சுகிற ஆச ஒண்ணு
பெ: பிஞ்சு இது தாங்காது
சொல்லிவிடு போதுமுன்னு
ஆ: தோதா அணைச்சபடி தாங்கிப் புடிப்பேன்
பட்டுச்சேலை கசங்காம பாடம் படிப்பேன்
பெ: அந்தியில பந்தி வைக்கும் போது
என்ன வரம் வேணுமின்னு கேளு
ஆ: அதற்குள்…தாகம் தணிஞ்சிரும்
பெ: மாமா ஒனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
ஆ: மானே ஒனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
பெ: வச்ச கண்ணு மாறாம
வச்சபடி பாத்திருக்கு
ஆ: உச்சந்தலை சூடேறி
உள்ளுக்குள்ள வேர்த்திருக்கு
பெ: ஆத்து மணலோரம் ஊத்து பறிச்சு
கைய சேத்து அணைச்சபடி முங்கி குளிச்சு
ஆ: அல்லிக்கொடி பின்னுவதப் போ..ல
தண்ணிக்குள்ள நின்னுக்கிட்டு நா..ம
பெ: அடாடா அதுதான் புது சொகம்
ஆ: மானே ஒனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
பெ: மாமா ஒனக்கு ஒரு தூ..து விட்டேன்
அந்தி மாலக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
ஆ: வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு