menu-iconlogo
logo

Anbu Nadamadum

logo
Letras
அன்பு நடமாடும்

கலைக் கூடமே

ஆசை மழை மேகமே

கண்ணில் விளையாடும்

எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே

அன்பு நடமாடும்

கலைக் கூடமே

ஆசை மழை மேகமே

கண்ணில் விளையாடும்

எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே

மாதவிக் கொடிப்

பூவின் இதழோரமே

மயக்கும் மதுச் சாரமே... ஏ...

மாதவிக் கொடிப்

பூவின் இதழோரமே..

மயக்கும் மதுச் சாரமே

மஞ்சள் வெயில் போலும்

மலர் வண்ண முகமே

மன்னர் குலத் தங்கமே

பச்சை மலைத்

தோட்டம் மணியாரமே

பாடும் புது ராகமே

அன்பு நடமாடும்

கலைக் கூடமே..ஏ...

ஆசை மழை மேகமே..

கண்ணில் விளையாடும்

எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே

வெள்ளலை

கடலாடும் பொன்னோடமே

விளக்கின் ஒளி வெள்ளமே... ஏ...

வெள்ளலை கடலாடும்

பொன்னோடமே

விளக்கின் ஒளி வெள்ளமே...

செல்லும் இடம் தோறும்

புகழ் சேர்க்கும் தவமே

தென்னர் குல மன்னனே..ஏ...

இன்று கவி பாடும்

என் செல்வமே

என்றும் என் தெய்வமே…

மாநிலம் எல்லாமும்

நம் இல்லமே

மக்கள் நம் சொந்தமே..

காணும் நிலமெங்கும்

தமிழ் பாடும் மனமே

உலகம் நமதாகுமே..ஏ..

சொல் வண்ணமே

யாவும் உறவாகுமே..

அன்பு நடமாடும்

கலைக் கூடமே

ஆசை மழை மேகமே..

கண்ணில் விளையாடும்

எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே..