menu-iconlogo
logo

Pasumai Niraindha

logo
Letras
பசுமை நிறைந்த நினைவுகளே

பாடித்திரிந்த பறவைகளே

பழகிக் கழித்த தோழர்களே

பறந்து செல்கின்றோம்

குரங்குகள் போலே

மரங்களின் மேலே

தாவித்திரிந்தோமே

குரங்குகள் போலே

மரங்களின் மேலே

தாவித்திரிந்தோமே

குயில்களைப் போலே

இரவும் பகலும்

கூவித் திரிந்தோமே

குயில்களைப் போலே

இரவும் பகலும்

கூவித் திரிந்தோமே

வரவில்லாமல் செலவுகள்

செய்து மகிழ்ந்திருந்தோமே

வரவில்லாமல் செலவுகள்

செய்து மகிழ்ந்திருந்தோமே..

வாழ்க்கைத் துன்பம்

அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே

நாமே வாழ்ந்து வந்தோமே..

பசுமை நிறைந்த நினைவுகளே

பாடித்திரிந்த பறவைகளே

பழகிக் கழித்த தோழர்களே

பறந்து செல்கின்றோம்..

எந்த ஊரில் எந்த நாட்டில்

என்று காண்போமோ

எந்த ஊரில் எந்த நாட்டில்

என்று காண்போமோ

எந்த அழகை எந்த விழியில்

கொண்டு செல்வோமோ

எந்த அழகை எந்த விழியில்

கொண்டு செல்வோமோ

இந்த நாளை, வந்த நாளில்

மறந்து போவோமோ

இந்த நாளை, வந்த நாளில்

மறந்து போவோமோ

இல்லம் கண்டு பள்ளி

கொண்டு மயங்கி நிற்போமோ,

என்றும் மயங்கி நிற்போமோ..

பசுமை நிறைந்த நினைவுகளே

பாடித்திரிந்த பறவைகளே

பழகிக் கழித்த தோழர்களே

பறந்து செல்கின்றோம்...

நாம் பறந்து செல்கின்றோம்...