ம்... ம்... ம்...
ஹும்..ஹும்..ஹும்..
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவள வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே
உண்ணும் அழகை பார்த்திருப்பாயே
உறங்க வைத்தே விழித்திருப்பாயே
கண்ணை இமை போல் காத்திருப்பாயே
காதல் கொடியே கண் மலர்வாயே..
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவள வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே
பிஞ்சு முகத்தின் ஒளி இழந்தாயே
பேசிப் பழகும் மொழி மறந்தாயே
அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே
அன்னக் கொடியே அமைதி கொள்வாயே
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவள வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே
ஈன்ற தாயை நான் கண்டதில்லை
எனது தெய்வம் வேறெங்கும் இல்லை
உயிரை கொடுத்தும் உனை நான் காப்பேன்
உதய நிலவே கண் துயில்வாயே
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவள வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே
ம்... ம்... ம்... ம்...