நல்வரவு
மேகத்தின் உள்ளே
நானும் ஒளிந்தால்
ஐயோ எப்படி என்னை கண்டு
பிடிப்பாய் பிடிப்பாய்
மேகத்தில் மின்னல் டார்ச் அடித்து
அந்த வானத்தில் உன்னை கண்டு
பிடிப்பேன் பிடிப்பேன்
ஹே கிள்ளாதே
என்னை கொள்ளாதே
உன் பார்வையில் பூத்தது நானா
சுடு கேள்வி கேட்டாலும்
பனி வார்த்தை சொல்கின்றாய்
என் நெஞ்சு மசியாது புரியாதா
கண்ணாடி வளையாது தெரியாதா
கண்ணாடி முன் நின்று
உன் நெஞ்சை நீ கேளு
தன் காதல் அது சொல்லும்
தெரியாதா
தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா
ஏப்ரல் மாதத்தில்
ஓர் அர்த்த ஜாமத்தில்
உன் ஜன்னல் ஓரத்தில்
நிலா நிலா
கண்கள் கசக்கி
நான் துள்ளி எழுந்தேன்
அது காதில் சொன்னது
ஹலோ ஹலோ
நிலா நிலா கைவருமே
தினம் தினம் சுகம் தருமே