menu-iconlogo
logo

Yaar Indha Saalai Oram

logo
Paroles
பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : யாா் இந்த சாலை ஓரம்

பூக்கள் வைத்தது காற்றில்

எங்கெங்கும் வாசம் வீசுது

பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது

மௌனம் வைத்தது இன்று

பேசாமல் கண்கள் பேசுது

ஆண் : நகராமல் இந்த நொடி

நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

பெண் : குளிராலும் கொஞ்சம்

அனலாலும் இந்த நெருக்கம்

தான் கொல்லுதே

ஆண் : எந்தன் நாளானது இன்று

வேரானது வண்ணம் நூறானது

வானிலே

ஆண் : யாா் இந்த சாலை ஓரம்

பூக்கள் வைத்தது காற்றில்

எங்கெங்கும் வாசம் வீசுது

இசை 1

ஆண் : தீர தீர ஆசையாவும்

பேசலாம் மெல்ல தூரம் விலகி

போகும் வரையில் தள்ளி நிற்கலாம்

பெண் : என்னை நானும்

உன்னை நீயும் தோற்கலாம்

இங்கு துன்பம் கூட இன்பம்

என்று கண்டு கொள்ளலாம்

ஆண் : என்னாகிறேன் என்று

ஏதாகிறேன்

பெண் : எதிா் காற்றிலே

சாயும் குடையாகிறேன்

ஆண் : எந்தன் நெஞ்சானது

இன்று பஞ்சானது அது

பறந்தோடுது வானிலே

பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது

மௌனம் வைத்தது இன்று

பேசாமல் கண்கள் பேசுது

இசை 2

ஆண் : மண்ணில் ஓடும்

நதிகள் தோன்றும் மழையிலே

அது மழையை விட்டு ஓடி

வந்து சேரும் கடலிலே

பெண் : வைரம் போல பெண்ணின்

மனது உலகிலே அது தோன்றும்

வரையில் புதைந்து கிடக்கும்

என்றும் மண்ணிலே

ஆண் : கண்ஜாடையில்

உன்னை அறிந்தேனடி

பெண் : என் பாதையில்

இன்று உன் காலடி

ஆண் : நேற்று நான் பாா்ப்பதும்

இன்று நீ பாா்ப்பதும் நெஞ்சம்

எதிா் பாா்ப்பதும் ஏனடி

ஆண் : யாா் இந்த சாலை ஓரம்

பூக்கள் வைத்தது காற்றில்

எங்கெங்கும் வாசம் வீசுது

பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது

மௌனம் வைத்தது இன்று

பேசாமல் கண்கள் பேசுது

ஆண் : நகராமல் இந்த நொடி

நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

பெண் : குளிராலும் கொஞ்சம்

அனலாலும் இந்த நெருக்கம்

தான் கொல்லுதே

ஆண் : எந்தன் நாளானது இன்று

வேரானது வண்ணம் நூறானது

வானிலே

கவலை மறந்து மனம் விட்டு பாடுங்க நண்பர்களே

Yaar Indha Saalai Oram par G.V.Prakash Kumar/Saindhavi - Paroles et Couvertures