menu-iconlogo
logo

Maharajanodu Rani

logo
Paroles
படம்: சதி லீலாவதி

பாடல்: மகராஜனோடு ராணி

பாடகர்: பி.உன்னிகிருஷ்னன்,

கே.எஸ். சித்ரா

ஆ: மகராஜனோடு ராணி வந்து சேரும்

இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்

பெ: மகராஜனோடு ராணி வந்து சேரும்

இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்

ஆ: இது மன்மத சாம்ராஜ்யம்.

புது மங்கல சௌபாக்யம்

ஒருபோதும் குறையாது.

தினம் கூடும் கூடும் ஆனந்தம்

மகராஜனோடு ராணி வந்து சேரும்

இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்

பெ: கங்கைக்கொரு வங்கக்கடல்

போல் வந்தான். அவன் வந்தான்

மங்கைக்கொரு இன்பக்கனா

அவன் தந்தான். அவன் தந்தான்

ஆ: கண்ணில் என்ன வண்ணங்கள்.

சின்னச் சின்ன மின்னல்கள்

கண்ணில் என்ன வண்ணங்கள். சின்னச்

சின்ன மின்னல்கள்.

ஓர் காதல் பூத்ததோ

பெ: பக்கத் துணை வாய்க்காமல்

பெண் வாடினாளோ

ஆ: பக்கம் வந்து கை சேர

பண் பாடினாளோ

பெ: ஒரு ராகம். ஒரு தாளம்.

இணைகூடும்போது கானம்தான்

பெ: ராஜனோடு ராணி வந்து சேரும்

ஆ: இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்

இது மன்மத சாம்ராஜ்யம்.

புது மங்கல சௌபாக்யம்

ஒருபோதும் குறையாது.

தினம் கூடும் கூடும் ஆனந்தம்

ராஜனோடு ராணி வந்து சேரும். இந்த

ராஜ யோகம் காலம்தோறும் வாழும்

ஆ: மன்னன் தொட தன்னைத் தந்தாள்

பூம்பாவை, பூம்பாவை

என்னென்னவோ நெஞ்சில் கொண்டாள்

பேராசை, பேராசை

பெ: சந்திக்கின்ற சந்தர்ப்பம்

சின்னப் பெண்ணின் விண்ணப்பம்

சந்திக்கின்ற சந்தர்ப்பம்

சின்னப் பெண்ணின் விண்ணப்பம்.

நீ கேட்க வேண்டுமோ

ஆ: இலக்கணம் பார்க்காது

ஓர் பாடல் கூற

பெ: இடைவெளி தோன்றாது

ஓர் ஜோடி சேர

ஆ: என்ன வேகம், என்ன தாகம்.

ஒரு காவல் தாண்டக் கூடுமோ

ஆ: ராஜனோடு ராணி வந்து சேரும்.

இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்

பெ: இது மன்மத சாம்ராஜ்யம்.

புது மங்கல சௌபாக்யம்

ஒருபோதும் குறையாது,

தினம் கூடும் கூடும் ஆனந்தம்

ஆ&பெ: ராஜனோடு ராணி வந்து சேரும்.

இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்

மகராஜனோடு ராணி வந்து சேரும்

இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்

நண்றி