பெ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
படம்: தூறல் நின்னு போச்சு(1982)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேஷியா வாசுதேவன்,ஜானகி
பெ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
மலர்மாலை தலையணையாய்
சுகமே.. பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
•
ஆ: காவல் நூறு மீறி.. காதல் செய்யும் தேவி
உன்சேலையில் பூவேலைகள்..
உன்மேனியில் பூஞ்சோலைகள்..
பெ: அந்தி பூவிரியும் அதன் ரகசியம்
சந்தித்தால் தெரியும்
இவளின் கனவு தணியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்....
ஆ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
•
பெ: ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது
ஆ: ல ல ல ல .. லால்ல லால்ல லால்லா
பெ: கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளில் நீராடினாள்
ஆ: ரா ரா..ரா….ரா..ரா..ரா...ரா..ரா..
ஆ: அன்பே ஆடை கொடு எனை
அனுதினம் அள்ளிச் சூடி விடு
பெ: இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு....
ஆ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
பெ: மலர்மாலை தலையணையாய்
சுகமே.. பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
ஆ&பெ: தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ...
Thanks for joining