M: ஆஆஆஆஆஆ....ஆஆஆஆஆஆ....
ஆட்டுக்குட்டி முட்டை இட்டு
கோழி குட்டி வந்ததுன்னு
யானகுஞ்சு சொல்லக்கேட்டு
பூனைகுஞ்சு சொன்னதுண்டு
கதை இல்ல சாமி இப்போ காணுது பூமி
இதுமட்டும்தானா இன்னும் இருக்குது சாமி
கூத்துமேடை ராசாவுக்கு...ஏஏஏ
கூத்துமேடை ராசாவுக்கு
நூத்திரெண்டு பொண்டாட்டியாம்
நூத்திரெண்டு பொண்டாட்டியும்
வாத்து முட்ட போட்டதுவாம்
பட்டது ராணி அதுல பதினெட்டு பேரு
பதினெட்டு பேர்க்கும் வயசு
இருபத்தி ஆறு மொத்தம் இருபத்தி ஆறு
F: ஹான்
சின்ன குட்டிகளின் மேல் ஆணை
குண்டு சட்டிகளின் மேல் ஆணை
இது வள்ளுவனின் ஏட்டில் உண்டு
பரம்பரை பாட்டில் உண்டு
கதை இல்ல மகாராசி
ஆட்டுக்குட்டி முட்டை இட்டு
கோழி குட்டி வந்ததுன்னு
யானகுஞ்சு சொல்லக்கேட்டு
பூனைகுஞ்சு சொன்னதுண்டு
கதை இல்ல சாமி இப்போ காணுது பூமி
இதுமட்டும்தானா இன்னும் இருக்குது சாமி
M: காக்கையில்லா சீமையிலே
காட்டெருமை மேய்க்கையிலே
பாட்டெடுத்து பாடிபுட்டு
ஓட்டமிட்ட சின்ன பொண்ணு
சந்தைக்கு போனா நானும் சாட்சிக்கு வரவா
சம்பந்தம் பண்ண உனக்கு சம்மதந்தானா
காக்கையில்லா சீமையிலே...
F: யேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
காக்கையில்லா சீமையிலே
காட்டெருமை மேய்க்கையிலே
காக்கவெச்சேன் நேரம் பார்த்து
பார்த்து வெச்ச ஆசை மச்சான்
சந்தைக்கு போறேன் நீங்க சாட்சிக்கு வாங்க
சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம் தாங்க
அட இந்த பக்கம் பாருங்களேன்
என் கன்னி மொழி கேளுங்களேன்
அடி ஏண்டி இந்த வஞ்சனைனு
கேக்குறியா கேக்குறியா
பழைய நினைப்புடா பேராண்டி பழைய நினைப்புடா
ஹ்ம்ம்
பழைய நினைப்புடா பேராண்டி பழைய நினைப்புடா
M: கிட்டப்பாவின் பாட்ட கேட்டேன்
சின்னப்பாவ நேருல பார்த்தேன்
கொட்ட கொட்ட வருகுதம்மா
சங்கீதமா பெருகுதம்மா
மேடைக்குப்போனா எனக்கு ஈடில்ல பொண்ணு
பாடினேன்னா நானும் நூத்துல ஒன்னு
என் தெறமைய காட்டட்டுமா
ரெண்டு சங்கதிய போடட்டுமா
தத ததரின்னா ததரின்னா ததரின்னா ததரின்னா
ததரின்னா ததரின்னா ததரின்னா ததரின்னா
ததரின்னா ததரின்னா ததரின்னா ததரின்னா
ஆஆஆஆஆஆ....