என்ன சொல்லுவேன்
என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன்
தூக்கத்த வாங்கல
இந்த வேதனை யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த சொன்னேனடி
சோக ராகம் சொகம் தானே
சோக ராகம் சொகம் தானே
யாரது போறது
குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா
பூங்காற்று திரும்புமா
என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில் வெச்சு
தாலாட்ட எனக்கொரு
தாய் மடி கெடைக்குமா