menu-iconlogo
logo

Oh Priya Priya (Short)

logo
Paroles
அன்பு கொண்ட கண்களும்

ஆசைகொண்ட நெஞ்சமும்

ஆணை இட்டு மாறுமோ

பெண்மை தாங்குமோ

ராஜ மங்கை கண்களே

என்றும் என்னை மொய்ப்பதோ

வாடும் எழை இங்கு ஓர்

பாவி அல்லவோ

எதனாலும் ஒரு நாளும்

மறையாது ப்ரேமையும்

எரித்தாலும் மரித்தாலும்

விலகாத பாசமோ

கன்னி மானும் உன்னுடன்

கலந்ததென்ன பாவமோ

காதல் என்ன காற்றிலே

குலைந்து போகும் மேகமோ

அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா...

ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா...

எல்லோருக்கும் இருப்பது

கையளவு இதயம்

அனால்,ஒவ்வொருவருக்கும் அதில்

கடல் அளவு காயம் ....

காளிதாசன் ஏடுகள்

கண்ணன் ராச லீலைகள்

பருவ மோகம் தந்தது

பாவம் அல்லவே

ஷாஜஹானின் காதலி

தாஜ்மஹால் பூங்கிளி

பாசம் வைத்த பாவம்தான்

சாவும் வந்தது

இறந்தாலே இறவாது

விளைகின்ற ப்ரேமையே

அடி நீயே பலியாக

வருகின்ற பெண்மையே

விழியில் பூக்கும் நேசமாய்

புனிதமான பந்தமாய்

பேசும் இந்த பாசமே

இன்று வெற்றி கொள்ளுமே

இளம் கன்னி உன்னுடன் கூட வா வா

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா

ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஏக்கம் என்ன பைங்கிளி

என்னை வந்து சேரடி

நெஞ்சிரண்டு நாளும் பாட

காவல் தாண்டி பூவை இங்காட

காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்

ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்

Oh Priya Priya (Short) par Mano/K. S. Chithra - Paroles et Couvertures