menu-iconlogo
logo

Alangaram Kalayatha

logo
Paroles
பாடல் : அலங்காரம் கலையாத

படம் : ரோஜாவின் ராஜா

இசை : எம் எஸ் விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பாடியவர்: டீ எம் எஸ் பி சுசீலா

நடிப்பு : சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ

அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்

அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே

அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்

அன்பே.. உன் எழில் கண்ட ஒரு நாளிலே

ஆனந்த மேகங்கள் பூத்தூவ கண்டேன்

ஐயா உன் முகம் பார்த்த ஒருநாளிலே

ஆனந்த மேகங்கள் பூத்தூவ கண்டேன்

ஐயா உன் முகம் பார்த்த ஒருநாளிலே

ஐயா உன் முகம் பார்த்த ஒருநாளிலே

பொட்டோடு பூ கண்ட பன்னீர் வரம்

பொன்மாலை பெண்ணுக்கு மஞ்சம் தரும்

பொட்டோடு பூ கண்ட பன்னீர் வரம்

பொன்மாலை பெண்ணுக்கு மஞ்சம் தரும்

நீரோடு விளையாடி போகின்ற தென்றல்

நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும்

நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும்

அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்

அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே

உண்டாயின் உண்டென்று மனம் கொள்ளவோ

இல்லாயின் இல் என்று வான் செல்லவோ

எங்கேனும் பூ பந்தல் மேளங்களோடு

கல்யாண தமிழ் பாடி நடமாடுவோம்

கல்யாண தமிழ் பாடி நடமாடுவோம்

அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்

அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே

தான் சூடி மலர் தந்த ஆண்டாளிடம்

அழகான மலர்மாலை நாம் வாங்குவோம்

தான் சூடி மலர் தந்த ஆண்டாளிடம்

அழகான மலர்மாலை நாம் வாங்குவோம்

தேன் ஆட்சி தான்

செய்யும் மீனாட்சி சாட்சி

தேன் ஆட்சி தான் செய்யும் மீனாட்சி சாட்சி

திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம்

திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம்

அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்

அன்பே.. உன் எழில் கண்ட ஒரு நாளிலே

அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்

அன்பே.. உன் எழில் கண்ட ஒரு நாளிலே