Movie:Achamillai Achamillai
Music Director:V.S.Narasimhan
Singer:P.Susheela , S.P.Balasubrahmanyam
.
பெ: ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
பெ: ஒம் பேரைச் சொல்லும் கைப்பிள்ளையே
நான் மட்டும் சொல்ல வாய் வல்லையே
நீ பாக்கும் போது தவிப்பாச்சு
செவ்வந்திப் பூவும் செவப்பாச்சு
ஆ: பார்வையிலே கெலிச்சாளே
புளியங் கொம்பா புடிச்சாளே
வேரோடதான் மனச பறிச்சாளே
ஆ: ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நான் போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
ஆ: ஒங் கண்ணு ரெண்டும் துடிக்குதடி
கல்யாண மேளம் அடிக்குதடி
ஆசையை நெஞ்சில் சுமந்தபடி
அண்ணாந்து பாக்கும் இளைய கொடி
பெ: ஒரங்காம தான் ஒம்ம பாத்தேன்
ஒமக்காகத்தான் கன்னி காத்தேன்
ஒம் மடியா நெனச்சு தல சாச்சேன்
ஆ: ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நான் போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
பெ: ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
Thank You