menu-iconlogo
logo

Vizhigalin Aruginil

logo
Paroles
விழிகளின் அருகினில் வானம்

வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்

இது ஐந்து புலன்களின் ஏக்கம்

என் முதல் முதல் அனுபவம் ஓ யே

ஒலியின்றி உதடுகள் பேசும்

பெறும் புயலென வெளிவரும் சுவாசம்

ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்

இது அதிசய அனுபவம் ஓ யே

பெண்ணை சந்தித்தேன்

அவள் நட்பை யாசித்தேன்

அவள் பண்பை நேசித்தேன்

வேறென்ன நான் சொல்ல ஓ யே

பூ போன்ற கன்னி த் தேன்

அவள் பேர் சொல்லித் தித்தித்தேன்

அது ஏன் என்று யோசித்தேன்

அட நான் எங்கு சுவாசித்தேன்

காதோடு மெளனங்கள்

இசை வார்க்கின்ற நேரங்கள்

பசி நீர் தூக்கம் இல்லாமல்

உயிர் வாழ்கின்ற மாயங்கள்

அலைகடலாய் இருந்த மனம்

துளித் துளியாய் சிதறியதே

ஐம்புலனும் என் மனமும்

எனக்கெதிராய் செயல்படுதே

விழி காண முடியாத மாற்றம்

அதை மூடி மறைக்கின்ற தோற்றம்

ஒரு மெளன புயல் வீசுதே

அதில் மனம் தட்டுத் தடுமாறும் ஓ யே

பூவில் என்ன புத்தம் புது வாசம் (பூவில் என்ன புத்தம் புது வாசம்)

தென்றல் கூட சந்தேகமாய் வீசும் (தென்றல் கூட சந்தேகமாய் வீசும்)

ஏதோ வந்து போன் தேன்மழை தூறும் (ஏதோ வந்து போன் தேன்மழை தூறும்)

யாரோ என்று எங்கோ மனம் தேடும் (யாரோ என்று எங்கோ மனம் தேடும்)

கேட்காத ஓசைகள்

இதழ் தாண்டாத வார்த்தைகள்

இமை ஆடாத பார்வைகள்

இவை நான் கொண்ட மாற்றங்கள்

சொல் என்னும் ஓர் நெஞ்சம்

இனி நில் என ஓர் நெஞ்சம்

எதிர்பார்க்காமல் என் வாழ்வில்

ஒரு போர்க்காலம் ஆரம்பம்

இருதயமே துடிக்கிறதா

துடிப்பது போல் நடிக்கிறதா

உரைத்திடவா மறைத்திடவா

ரகசியமாய் தவித்திடவா

ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்

எனை கத்தி இல்லாமல் கொய்யும்

இதில் மீள வழி உள்ளதே

இருப்பினும் உள்ளம் விரும்பாது ஓ யே

விழிகளின் அருகினில் வானம்

வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்

இது ஐந்து புலன்களின் ஏக்கம்

என் முதல் முதல் அனுபவம் ஓ யே

ஒலியின்றி உதடுகள் பேசும்

பெறும் புயலென வெளிவரும் சுவாசம்

ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்

இது அதிசய அனுபவம் ஓ யே

பெண்ணை சந்தித்தேன்

அவள் நட்பை யாசித்தேன்

அவள் பண்பை நேசித்தேன்

வேறென்ன நான் சொல்ல ஓ யே