menu-iconlogo
logo

Sivagami Nenappinile

logo
Paroles
ஆண் : சிவகாமி நெனப்பினிலே

பாடம் சொல்லமறந்து விட்டேன்

சிவகாமி நெனப்பினிலே

பாடம் சொல்லமறந்து விட்டேன்

பெண் : அடியாத்தி வாத்தியாரு

பாடம் சொல்லமறந்ததென்ன

ஆண் : முக்கனியே சர்க்கரையே

ஒத்தையிலே நிக்குறியே

பெண் : வந்து ஒட்டிக்கோ

ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ

ஆண் : சிவகாமி நெனப்பினிலே

பாடம் சொல்லமறந்து விட்டேன்

பெண் : அடியாத்தி வாத்தியாரு

பாடம் சொல்ல மறந்ததென்ன

ஆண் : ஆலமரக்கிளி அன்னாடம் என்னோடு

பேசுமா இல்லை ஏசுமா

ஆத்தங்கரையினில் அத்தானும்

முத்தாடக்கூடுமா விட்டு ஓடுமா

பெண் : கோலக்கிளிப் பேச்ச கட்டாயம் தட்டாம

கேட்கவா என்னைப் பார்க்கவா

காலம் கடத்தாமல் கையோடு கையாக

சேர்க்கவா மையல் தீர்க்கவா

ஆண் : போதும் இது போதும் இந்த பிறவியில்

வேறொன்றும் வேண்டாமே

பெண் : மோதும் அலை மோதும் நெஞ்சக் கடலில்

ஆசைகள் ஓயாம

ஆண் : வந்து ஒட்டிக்கோ

ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ

பெண் : அடியாத்தி வாத்தியாரு

பாடம் சொல்லமறந்ததென்ன

ஆண் : சிவகாமி நெனப்பினிலே

பாடம் சொல்லமறந்து விட்டேன்

பெண் : எம்மனச ஒட்டுறியே

மம்முட்டிப் போல் வெட்டுறியே

ஆண் : வந்து ஒட்டிக்கோ

ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ

பெண் : காதல் கடுதாசி கண்ணால இந்நேரம்

போட்டது வந்து சேர்ந்தது

கூடிக் கலந்திட கும்மாளம் இப்போது

தோணுது பொண்ணு நாணுது

ஆண் : தேனும் திணைமாவும்

தின்னாம நின்னாலே

தாங்குமா பசி நீங்குமா

தேடக் கிடைக்காத பொன்னாரம் என் கையில்

சேருமா சுகம் மீறுமா

பெண் : பேசி வலை வீசி

இந்த மனசுல போதைய ஏத்தாதே

ஆண் : ராசி நல்ல ராசி நம்ம பொருத்தத்தை

நீ என்றும் மாத்தாதே

பெண் : இப்ப என்னவோ என்னவோ என்னவோ

என்னைப் பண்ணுதே பண்ணுதே பண்ணுதே

ஆண் : சிவகாமி நெனப்பினிலே

பாடம் சொல்லமறந்து விட்டேன்

பெண் : அடியாத்தி வாத்தியாரு

பாடம் சொல்லமறந்ததென்ன

எம்மனச ஒட்டுறியே

மம்முட்டிப் போல் வெட்டுறியே

ஆண் : வந்து ஒட்டிக்கோ

ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

பெண் : என்னை கட்டிக்கோ

கட்டிக்கோ கட்டிக்கோ

ஆண் : சிவகாமி நெனப்பினிலே

பாடம் சொல்ல

மறந்து விட்டேன்

பெண் : அடியாத்தி வாத்தியாரு

பாடம் சொல்ல

மறந்ததென்ன