பெ: காத்தோடு பூவுரச.. பூவ வண்டுரச
உன்னோடு நான்.. என்னோடு நீ
பூவா...காத்தா...உரச
ஆ: காத்தோடு பூவுரச.. பூவ வண்டுரச
உன்னோடு நான்.. என்னோடு நீ
பூவா...காத்தா...உரச
பெ: ஏத்தம் போட்டு எறைச்ச தண்ணி ஓடும்
ஏத்தம் போட்டு எறைச்ச தண்ணி ஓடும்
ஏன்...அது ஏன்
அதைத்தேடும் வயலும் வாடும்
ஆ: ஆறாதோ தாகம் வந்தா
ஆச மோகம் வந்தா
ஆத்தாடி...ஆளாகி...நாளாச்சுதோ
பெ: காத்தோடு பூவுரச.. பூவ வண்டுரச
உன்னோடு நான்...
ஆ: ஆ...என்னோடு நீ
பூவா...காத்தா...உரச
ஆ:கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
யார்...அது யார்
அதைக்கேட்டால் தெரியும் சேதி
பெ: நான் தானே சின்னப்பொண்ணு
பூவும் நானும் ஒண்ணு
நான் யாரு...தேனாறு...நீராட வா
ஆ: காத்தோடு பூவுரச.. பூவ வண்டுரச
உன்னோடு நான்..
பெ: ஆஆ.. என்னோடு நீ
பூவா...காத்தா...உரச