பெண்: தேன் கவிதை தூது விடும்
நாயகனே மாயவனே...
நூலூடையை ஏங்க விடும்
வானமுத சாகரனே...
ஆண்: நீதானே நான் பாடும் சுகமான ஆகாசவானி
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்காரத்தேனீ
பெண்: தடைகளை கடந்து நீ
மடைகளை திறந்திட வா...
ஆண்: இன்னும் என்னை என்ன செய்ய
போகிறாய் அன்பே அன்பே...
பெண்: அஹா என்னை கண்டால்
என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே ஏ...
ஆண்: கைகள் தா... னாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
பெண்: சொல்லு சொல்லு சிங்கார வேலா...
ஆண்: இன்னும் என்னை என்ன
செய்யப்போகிறாய் அன்பே அன்பே
அன்பே...அன்பே....
பெண்: என்னை கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே...அன்பே...