யாரின் மனம் யாருக்கென்று
இறைவன் வகுத்தான்
இரு மனம் சேர்வதிங்கு
தேவன் சொல்லித்தான்
பூஜைக்கிது ஏற்றதென்று
மலரை படைத்தான்
தலைவனும் மாலையென்று
சூடிக் கொள்ளத்தான்
ஓர் நெஞ்சின் ராகம் தான்
விழி பாடும் நேரம் தான்
ஓர் நெஞ்சின் ராகம் தான்
விழி பாடும் நேரம் தான்
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காற்றே
வைகை நதி ஓரம்
பொன்மாலை நேரம்
காத்தாடுது
கள்வடியும் பூக்கள்
காத்தோடு சேர்ந்தே
கூத்தாடுது
இது அன்பின் வேதம்
அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காத்தே
வைகை நதி ஓரம்
பொன்மாலை நேரம்
காத்தாடுது
கள்வடியும் பூக்கள்
காத்தோடு சேர்ந்தே
கூத்தாடுது