படம் : சலங்கை ஒலி
பாடகர்கள் : எஸ்,பி.பி.
மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசை :இளையராஜா
பாடல் வரிகள் : வைரமுத்து
பாடல் விரும்பி கேட்டவர்
பெண் : வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
அஹா வெண்ணிலா மின்னிடும்
கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே
பல விந்தைகள் செய்தவனே
ஆண் : ஆஹா ,ஹஹஹ
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
பாடல் விரும்பி கேட்டவர்
ஆண் : மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக்கொண்டு திரிந்தாயே
மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக்கொண்டு திரிந்தாயே
பெண் :அன்னையின்றிப் பிறந்தாயே
பெண்களோடு அலைந்தாயே
மோகனங்கள் பாடி வந்து
மோக வலை விரித்தாயே
ஆண் : ஆஆ……ஆஅ…..ஆஅ….
பெண் : மோகனங்கள் பாடி வந்து
மோக வலை விரித்தாயே
ஆண் : சேலைகளைத் திருடி
அன்று செய்த லீலை பல கோடி
பொன்னான காவியங்கள்
போற்றிப் பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
பெண் : ஆஹா ,ஹஹஹ
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
பாடல் விரும்பி கேட்டவர்
பெண் : பெண்களுடை எடுத்தவனே
தங்கைக் குடை கொடுத்தவனே
பெண்களுடை எடுத்தவனே
தங்கைக் குடை கொடுத்தவனே
ஆண் : ராச லீலை புரிந்தவனே
ராஜ வேலை தெரிந்தவனே
கீதையென்னும் சாரம் சொல்லி
கீர்த்தியினை வளர்த்தாயே
பெண் :ஆஅ…..ஆஆ…….ஆஆ
ஆண் : கீதையென்னும் சாரம் சொல்லி
கீர்த்தியினை வளர்த்தாயே
பெண் : கவிதைகள் உன்னை வடிக்க
காலமெல்லாம் நிலைத்தாயே
வானில் உந்தன் கானமெல்லாம்
இன்றும் என்றும் வாழும் கண்ணா
பெண் : வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
ஆண் : ஆஹா, ஹஹஹ
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
பெண் : ஆஹா,ஹஹஹ வெண்ணிலா மின்னிடும்
கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே
ஆண் : ம்ம்ம்
பெண் : பல விந்தைகள் செய்தவனே
ஆண் : ஆஹா,ஹஹஹ வெண்ணிலா மின்னிடும்
கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே
பெண் : ம்ம்ம்
ஆண் : பல விந்தைகள் செய்தவனே
பெண் : ஆஹா, ஹஹஹ
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
பாடல் விரும்பி கேட்டவர்