menu-iconlogo
logo

Oh Kadhal Ennai

logo
Paroles
இசையமைப்பாளர் திரு.ஹம்சலேகா

அவர்களுக்கு நன்றி

இந்த அழகிய பாடலை பாடிய

திரு பாலசுப்ரமணியம் அவர்களுக்கும்

திருமதி.வாணி ஜெயராம் அவர்களுக்கும் நன்றி

பெண்: ஓ..ஓ ஓ காதல் என்னை

காதலிக்கவில்லை

ஓ..ஓ ஓ காற்றும் என்னை

ஆதரிக்கவில்லை

கன்னி வெண்ணிலா

காத்திருக்கிறேன்

போகும் பாதையில்

பூத்திருக்கிறேன்

தீயில் வேகும் போதும்

ஓதிடும் மந்திரம்

ஒன்று தான்

ஒன்று தான்

ஐ லவ் யூ

இசை

பெண்: ஐ லவ் யூ

இசை

பெண்: ஐ லவ் யூ

இசை

பெண்: ஓ..ஓ ஓ காதல் என்னை

காதலிக்கவில்லை

ஓ..ஓ ஓ காற்றும் என்னை

ஆதரிக்கவில்லை

பெண்: கைகள் ஏந்தி வந்தேன்

கவனம் இல்லையா

கண்ணில் ஈரம் கண்டும்

கருணை இல்லையா

ஆண்: பாலை போல கள்ளும்

வெள்ளை இல்லையா

பருகி பார்க்கச்சொன்னால்

பாவம் இல்லையா

பெண்: நான் இன்று சீதையென்று

தீ குளிப்பேன் உன்னாலே

பெண் பாவம் சாபமென்று

காண வேண்டும் பின்னாலே

ஆண்: போதும் போதும் பெண்ணே

புன்னகை என்பது

காதலின் பல்லவி

ஐ லவ் யூ

இசை

ஆண்: ஐ லவ் யூ

இசை

ஆண்: ஐ லவ் யூ

இசை

ஆண்: ஓ..ஓ ஓ காதல் உன்னை காதலித்ததம்மா

ஓ..ஓ ஓ காற்றும் உன்னை

ஆதரித்ததம்மா

ஆண்: என்னைக் கொல்லத்தானா

இளமை வந்தது

எந்த நாளில் அம்மா

பருவம் வந்தது

பெண்: புருவம் வந்த போதே

பருவம் வந்தது

புடவை மாற்றும் போது

கர்வம் வந்தது

ஆண்: ஸ்ரீராமன் வில் வளைத்து

சீதை கொண்டான் அப்போது

என் சீதை வில் வளைத்து

ராமன் கொண்டாள் இப்போது

பெண்: தீயில் வேகும் போதும்

ஓதிடும் மந்திரம்

ஒன்று தான்

ஒன்று தான்

ஐ லவ் யூ

இசை

பெண்: ஐ லவ் யூ

இசை

பெண்: ஐ லவ் யூ

இசை

ஆண்: ஓ..ஓ ஓ காதல் உன்னை காதலித்ததம்மா

ஓ..ஓ ஓ காற்றும் உன்னை

ஆதரித்ததம்மா

பெண்: கன்னி வெண்ணிலா

காத்திருக்கிறேன்

போகும் பாதையில்

பூத்திருக்கிறேன்

ஆண்: தீயில் வேகும் போதும்

ஓதிடும் மந்திரம்

ஒன்று தான்

ஒன்று தான்

பெண்: ஐ லவ் யூ

ஆண்: ஐ லவ் யூ

பெண்: ஐ லவ் யூ