நல்வரவு
ராதா..
உனக்கு சீக்கிரம் கல்யாணம்.
(Shock) அண்ணா?
ஆமாம்மா..
மாப்பிள்ள பெரிய இடத்து பையன்.
என்ஜினீயர்.
உனக்கு விருப்பம் தானே?
(Sad) விருப்போ வெறுப்போ,
எதுவுமே எனக்கு கிடையாது ண்ணா.
எனக்கு கணவரா வரப்போறவர்,
எங்கண்ணன் மேல நான் கொண்டிருக்கிற
அன்ப ஆதரிக்குறவரா தான் இருக்கணும்.
அழிக்குறவரா இருந்தா, அதமட்டும் என்னால
அனுமதிக்கவே முடியாது.
ராதா, நான் உனக்காக பாத்து வச்சிருக்கிற
மாப்பிள்ளைய நீ பாக்க வேண்டாமா மா?
வேண்டாம் ணா.
கூன், குருடு, நொண்டி முடமா
இருந்தாலும் சரி,
எங்கண்ணன் யார பாத்து நிச்சயம் பன்றாரோ,
அவர்தான் என் கணவர்.
(Emotional) ராதா !
உன் ஒவ்வொரு வார்த்தையும் என்
உயிரையே ஆக்கிரமிக்குது மா !
Dress பண்ணிக்கிட்டு ரெடியா இரு.
நான் மாப்பிள்ளைய கூட்டிட்டு வரேன்.
வாங்க.
ராதா.
வாம்மா.
வா.
மாப்பிள்ள வந்துருக்கார்.
வணக்கம் சொல்லு.
வணக்கம்.
(Happy) நீங்களா?
(Emotional) அண்ணா.
(Emotional) அண்ணா.
(Emotional) என்..னம்மா !
அண்ணா.
நான் விரும்பினவர கல்யாணம்
செய்துக்கலாம் ங்கற ஆசை
நேத்தே என்ன விட்டு போய்டுச்சு!
இப்ப நீங்க அவரையே
அழைச்சுக்கிட்டு வருவீங்கன்னு
நான் நெனைக்கவே இல்ல ணா..
நீங்க மனிதரே இல்ல.
கடவுள் அண்ணா,
கடவுள் !
இல்லம்மா!
இல்ல..
அண்ணன் மேல கொண்டிருக்குற
அன்புக்காக ஒரு தங்கை
தன் காதலையே தியாகம் செய்ய
தயாரா இருக்கும்போது,
தவமிருந்தாலும் கிடைக்க முடியாத
அந்த தங்கைக்காக
ஒரு அண்ணன் எதுவேணும் னாலும்
செய்யலாம் மா.
அண்ணா.. (Crying)
ஆனந்தா! நான் என் கண்ணையே
உன் கிட்ட ஒப்படைக்குறேன்.
அதுல ஆனந்த கண்ணீர தான்
நான் எப்பவும் பாக்கணும்.
அம்மா ராதா,
மஞ்சள் குங்குமத்தோட
நீ நீடூழி வாழணும் தாயே!