menu-iconlogo
logo

Megame Thoothaga Vaa

logo
Paroles
ஆண்: மேகமே! தூதாக வா!

அழகின்ஆராதனை

தென்றலே! தாலாட்ட வா!

இளமை முந்தானையை

மேகமே! தூதாக வா!

அழகின் ஆராதனை

பெண்: மஞ்சள் நீர் வண்ணமே!

கொஞ்சம் நில்லுங்களேன்

மன்னன் நீராடும் சமயம்

புள்ளி மான் கூட்டமே!

கொஞ்சம் துள்ளுங்களேன்

கண்ணன் தேரோடும் சமயம்

நாங்கள் கன்னம் தொட்டு பின்னல் இட்டு

விளையாடும் வரையில்

ஆண்: மேகமே! தூதாக வா!

அழகின் ஆராதனை

ஆண்: சின்ன வாழைத் தண்டு

என்னும் காலைக் கண்டு

வண்ண மீன் கூட்டம் தழுவ

அன்புத் தேனைச் சிந்தி

என்னைக் காணச் சொல்லி

அந்த தேன்கூடு மலர

நாங்கள் நெற்றிப் பொட்டை மாற்றிக்கொண்டு

இதழாலே இணைய

பெண்: மேகமே! தூதாக வா!

அழகின் ஆராதனை

ஆண்: கொஞ்சும் மாணிக்கங்கள்

சிந்தும் மணி முத்துக்கள்

உந்தன் செவ்வாயின் அழகு

பெண்: அந்த காணிக்கைகள்

உந்தன் கன்னங்களில்

தரும் பெண் என்னும் நிலவு

ஆண்: இன்னும் அச்சம் என்ன வெட்கம் என்ன

கண்ணே வா பழகு

பெண்: மேகமே! தூதாக வா!

அழகின் ஆராதனை

ஆண்: தென்றலே! தாலாட்ட வா!

இளமை முந்தானையை

Both: மேகமே! தூதாக வா!

அழகின் ஆராதனை

Megame Thoothaga Vaa par S.P.B/Susheela - Paroles et Couvertures