menu-iconlogo
logo

Nadhiyoram Naanal Ondru

logo
Paroles
பெ:: நதியோரம்…ம்ம்ம்

நதியோரம்

நாணல் ஒன்று

நாணம் கொண்டு

நாட்டியம் ஆடுது

மெல்ல..

நான் அந்த ஆனந்தம்

என் சொல்ல

நதியோரம் .. ம்ம்ம்..

ஆ:: நதியோரம்…ம்ம்ம்

நதியோரம்

நீயும் ஒரு

நாணல் என்று

நூலிடை என்னிடம்

சொல்ல...

நான் அந்த ஆனந்தம்

என் சொல்ல

நதியோரம்…ம்ம்ம்..

பெ: வெந்நிற மேகம்

வான் தொட்டிலை விட்டு

ஓடுவதென்ன

மலையை மூடுவதென்ன..

முகில் தானோ..

துகில் தானோ

முகில் தானோ..

துகில் தானோ

சந்தனக்காடிருக்கு

தேன் சிந்திட கூடிருக்கு

தேன் வேண்டுமா

நான் வேண்டுமா

நீ எனைக் கைகளில்

அள்ள..

நான் அந்த ஆனந்தம்

என் சொல்ல

ஆ:: நதியோரம்…ம்ம்ம்

நதியோரம்

பெ: லுலூலூ லுலுலூ

லுலுலுலூ லுலுலுலூ

ஆ: தேயிலைத்தோட்டம்

நீ தேவதையாட்டம்

துள்ளுவதென்ன

நெஞ்சை அள்ளுவதென்ன

பனி தூங்கும்

பசும் புல்லே

பனி தூங்கும்

பசும் புல்லே

மின்னுது உன்னாட்டம்

நல்ல

முத்திரை பொன்னாட்டம்

கார்காலத்தில் ஊர்கோலத்தில்

காதலன் காதலி செல்ல

நான் அந்த ஆனந்தம்

என் சொல்ல

பெ: நதியோரம்…ம்ம்ம்

நதியோரம்

ஆ: நீயும் ஒரு

நாணல் என்று

நூலிடை ஹ ..

என்னிடம் சொல்ல..

நான் அந்த ஆனந்தம்

என் சொல்ல

ஆ/பெ : நான் அந்த ஆனந்தம்

என் சொல்ல