menu-iconlogo
logo

Kootathile Kovil Pura

logo
Paroles
கூட்டத்திலே கோவில்புறா

யாரை இங்கு தேடுதம்மா

கூட்டத்திலே கோவில்புறா

யாரை இங்கு தேடுதம்மா

கூட்டத்திலே கோவில்புறா

யாரை இங்கு தேடுதம்மா

கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம்

தந்தியடிக்குது தந்தியடிக்குது

குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி

மின்னலடிக்குது மின்னலடிக்குது

கூட்டத்திலே கோவில்புறா

யாரை இங்கு தேடுதம்மா

கூட்டத்திலே கோவில்புறா

யாரை இங்கு தேடுதம்மா

நான் பாடும் ராகங்கள் யார் தந்தது

என் காதல் தேவி நீ தந்தது

உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது

உன் ஆசை என்னைத் தாலாட்டுது

பூங்குயிலேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.........

பூங்குயிலே உந்தன் பாதையிலே

ஆனந்தத் தேன் பொழிவேன்

பாவையுன்னை எண்ணிக் கொண்டு

பாடுகின்றேன் பாடலொன்று

நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து

வாழுகின்றாய் கோவில் கொண்டு

ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில்

ஆயிரம் காவிய நாடகமாடிட ஏங்குது என் மனமே

கூட்டத்திலே கோவில்புறா

யாரை இங்கு தேடுதம்மா

கூட்டத்திலே கோவில்புறா

யாரை இங்கு தேடுதம்மா

நீதானே நானாடும் பிருந்தாவனம்

நின்றாடும் தேகம் ரோஜா வனம்

ஆகாயம் காணாத பொன் மேகமே

என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே

கன்னிப் பெண்ணே நீயும்

இல்லையென்றால் கான மழை வருமோ

தாமரைப் பூங் காலெடுத்து

நீ நடக்கும் வேளையிலே

தாளத்துடன் சந்தங்களைக்

கற்றுக் கொண்டேன் பொன் மயிலே

என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில்

வான் மழை போலிந்தப் பாவலன்

நெஞ்சினில் வாழிய வாழியவே

கூட்டத்திலே கோவில்புறா

யாரை இங்கு தேடுதம்மா

கூட்டத்திலே கோவில்புறா

யாரை இங்கு தேடுதம்மா

கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம்

தந்தியடிக்குது தந்தியடிக்குது

குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி

மின்னலடிக்குது மின்னலடிக்குது

ஸாகமபா தநிஸ நிஸக மா

கூட்டத்திலே கோவில்புறா

நிஸநிததா தந்நி தநிபா

பாமக நிதப ஸாநித நிஸகமபா

கூட்டத்திலே கோவில்புறா

கமகமகஸ கமபமகஸ பாபநிநி

ததஸாஸா நிநி காக பதநி ஸகம பா

கூட்டத்திலே கோவில்புறா

தத்தித்தகதிமி தளாங்கு தகதிமி

தகதித் தகதிமி தோம் தித்தோம்

தித் தகிட தகிட தகிட தகிட

தகிட ததுமி தஜனு தனுத தஜம் தஜம் தஜம் தகிட

தகதாம் தத் தரிகிட தரிகிடதத்

திரிகிட தரிகிடதோம்

க்ரிகிட தரிகிடதோம்

தத்தகதிமி தகதிமி தக திரிகிடதோம்

திரிகிடதோம் திரிகிடதோம் திரிகிடதோம்

கூட்டத்திலே கோவில்புறா

யாரை இங்கு தேடுதம்மா

கூட்டத்திலே கோவில்புறா

யாரை இங்கு தேடுதம்மா