menu-iconlogo
logo

Mayakkam Enna

logo
Paroles
வணக்கம்

ஆ : மயக்கமென்ன ,,

இந்த மௌனம் என்ன

மணி மாளிகை தான் கண்ணே ,

மயக்கமென்ன

இந்த மௌனம் என்ன

மணி மாளிகை தான் கண்ணே

தயக்கம் என்ன

இந்தச் சலனம் என்ன

அன்புக் காணிக்கை தான் கண்ணே

பெ : கற்பனையில் வரும் கதைகளிலே

நான் கேட்டதுண்டு கண்ணா –

என் காதலுக்கே வரும்

காணிக்கை என்றே

நினைத்ததில்லை கண்ணா

படம்

வசந்த மாளிகை

பாடல் இயற்றியவர்

கண்ணதாசன்

இசையமைப்பாளர்

எம்.எஸ்.வி

பாடகர்கள்

டி எம் எஸ் பி சுசீலா

நடிகர்கள்

சிவாஜிகணேசன் வாணிஶ்ரீ

தமிழில் தருவது

கீதாஞ்சலி

பதிவேற்றம்

அன்பு விஷ்வா

ஆ : தேர் போலே ஒரு பொன்னூஞ்சல்

அதில் தேவதை போலே நீ ஆட ,

பெ : பூவாடை வரும் மேனியிலே

உன் புன்னகை இதழ்கள் விளையாட

ஆ : கார்காலம் என விரிந்த கூந்தல்

கன்னத்தின் மீதே கோலமிட

பெ : கை வளையும்

மை விழியும்

கட்டியணைத்து கவி பாட

ஆ : மயக்கமென்ன

இந்த மௌனம் என்ன

மணி மாளிகை தான் கண்ணே

ஆ : அன்னத்தைத் தொட்ட

கைகளினால் மதுக்

கிண்ணத்தை இனி நான்

தொட மாட்டேன்

பெ : கன்னத்தில் இருக்கும்

கிண்ணத்தை எடுத்து

மதுவருந்தாமல் விட மாட்டேன்

ஆ : உன்னையல்லால் ஒரு

பெண்ணை இனி நான்

உள்ளத்தினாலும்

தொட மாட்டேன் –

பெ : உன் உள்ளம் இருப்பது

என்னிடமே அதை

உயிர் போனாலும் தர மாட்டேன்

ஆ : மயக்கமென்ன

இந்த மௌனம் என்ன

மணி மாளிகை தான் கண்ணே

தயக்கம் என்ன

இந்தச் சலனம் என்ன

அன்புக் காணிக்கை தான் கண்ணே

அன்புக் காணிக்கை தான் கண்ணே

️ ️நன்றி மீண்டும் சந்திப்போம் ️ ️

Mayakkam Enna par Tm Soundararajan/P. Susheela - Paroles et Couvertures