ம்ம்ம்ம்ம்ம்
( குரல் சரி செய்தல்)
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது
தென்னங் காத்து
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தழுவிக் கொண்டோடுது
தென்னங் காற்று
தென்னங்காத்து
தென்னங் காற்று
ஆஹா, காற்று இல்லே காத்து
தடவிக் கொண்டோடுது
தென்னங் காத்து
ஆ..
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது
தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது
உன்னைப் பார்த்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது
உன்னைப் பார்த்து
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது
தென்னங் காத்து
பாடல்
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
பிராப்தம்
இசை
எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்
கண்ணதாசன்
பாடகர்
ரி.எம். சௌந்தரராஜன்
பாடகி
பி. சுசீலா
நாயகன்
சிவாஜி கணேசன்
நாயகி
சாவித்திரி
செவ்வாழைத் தோட்டமும்
தென்னை இள நீர்களும்
தெம்மாங்கு பாடுது
நம்மைப் பார்த்து
தெம்மாங்கு பாடுது
நம்மைப் பார்த்து
சிங்காரத் தோணிகள்
பல்லாக்குபோல் வந்து
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவி கொண்டோடுது
தென்னங் காத்து
ஓஹோ ஹோ ஓ ஓ ஓ ஓஓஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
பன்னீரு பூச்சரம்
பச்சைப் புல்லு மேடையில்
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
தண்ணீரு ஓடையில்
சலசல ஓசையில்
சங்கீதம் கேட்பதும் நமக்காக
சங்கீதம் கேட்பதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவி கொண்டோடுது
தென்னங் காத்து
️ இசை ️
மாமாவின் பொண்ணுக்கு
ஆகாச மேகங்கள்
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
நான் பார்க்கக் கூடாத
பொல்லாத வானத்தில்
மாமன் மகள் போகுது நாணத்தோடு
மாமன் மகள் போகுது நாணத்தோடு
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவி கொண்டோடுது
தென்னங் காத்து
நானாச்சு வாவென்று
மீனாட்சி கோவிலில்
மணியோசை கேட்பதும் நமக்காக
மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சு என்றாலும்
பூவாச்சும் வருமென்று
மீனாட்சி சொன்னதும் நமக்காக
மீனாட்சி சொன்னதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவி கொண்டோடுது
தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது
உன்னைப் பார்த்து
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
லா லா
லலல்ல லலல்ல லலல்ல லா
நன்றி வணக்கம்