தமிழ் வரிகளில் பதிவேற்றம்
ஆண்: அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும்
மழையினிலும்
கலங்கவைக்கும்
இடியினிலும்
காற்றினிலும்
மழையினிலும்
கலங்கவைக்கும்
இடியினிலும்
கரையினிலே
ஒதுங்கி நின்றால்
வாழும்
ஹோய் ஹோய்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
தென்னை இளங்கீற்றினிலேஏஏஏஏ..ஏ..ஏ
தென்னை இளங்கீற்றினிலே
தாலாட்டும் தென்றலது
தென்னை இளங்கீற்றினிலே
தாலாட்டும் தென்றலது
தென்னைதனை சாய்த்துவிடும்
புயலாக வரும்பொழுது
தென்னைதனை சாய்த்துவிடும்
புயலாக வரும்பொழுது
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்தமனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்தமனம் வீழ்வதில்லை
அமைதியான நதியினிலே ஓடும்
(பெண்: ஓஓஓஓஓ..ஓஓஓஓ)
ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும்
(பெண்: ஓஓஓஓ..ஓ..ஓ.)
ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
பெண்; நாணலிலே காலெடுத்து
நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து
நடந்து வந்த பெண்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே
தொட்டில் கட்டும் மென்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே
தொட்டில் கட்டும் மென்மை இது
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அந்தியில் மயங்கி விழும்
காலையில் தெளிந்துவிடும்
அந்தியில் மயங்கி விழும்
காலையில் தெளிந்துவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால்
துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால்
துன்பநிலை மாறிவிடும்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
(இருவரும்) அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும்
மழையினிலும்
கலங்கவைக்கும்
இடியினிலும்
காற்றினிலும்
மழையினிலும்
கலங்கவைக்கும்
இடியினிலும்
கரையினிலே
ஒதுங்கி நின்றால்
வாழும்
ஹோய் ஹோய்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்