VHD Song uploaded by RAJ
VHD songs search key:Tamil Varigal
ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து திரும்ப திரும்ப பேசி பேசி
ஆண் : திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா
பெண் : திரும்ப திரும்ப கடிதம் போட்டு திரும்ப திரும்ப இதயம் கேட்டு
பெண் : திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா
ஆண் : இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்
ஆண் : இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்
பெண் : உயிரை கொண்டு உன்னை மூடினேன் ஆஆஆ……
ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து திரும்ப திரும்ப பேசி பேசி
ஆண் : திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா
ஆண் : உந்தன் வண்ண சேலையை காற்று கொண்டு போனதோ
ஆண் : காற்று கொண்டு போனதை மேகம் வாங்கி கொண்டதோ
ஆண் : வாங்கி கொண்ட சேலைதான் வானவில்லும் ஆனதோ
பெண் : முத்தம் வைத்து கொள்வதை வானம் என்ன எண்ணுதோ
பெண் : எண்ணி வைத்த புள்ளிகள் நட்சத்திரம் ஆனதோ
பெண் : உந்தன் பேரை சொல்வதில் கோடி இன்பம் கூடுதோ
ஆண் : காதலித்து பார்க்கையில் இதயம் நின்று போகுமே
பெண் : இதயம் நின்று போயினும் ரத்த ஓட்டம் ஓடுமே
ஆண் : பிறப்பு போல இறப்பு போலஒரு முறைதான் காதல் தோன்றுமே ஆஆ…
பெண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து திரும்ப திரும்ப பேசி பேசி
பெண் : திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா
பெண் : கவிஞன் மனசு போல நீ துருவி துருவி பார்க்கிறாய்
பெண் : கிராம மண்ணின் தென்றலாய் உரசி உரசி கேட்கிறாய்
பெண் : இந்த மென்மை ஆண்மையே உன்னை எண்ணி ஈர்த்தது
ஆண் : மேஜை விளக்கு போல நீ தலை குனிந்து போகிறாய்
ஆண் : கோடை கால மேகமாய் கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்
ஆண் : இந்த தன்மை தானடி என்னை உன்னில் கோர்த்தது
பெண் : இதய துடிப்பு என்பதே நிமிஷத்துக்கு என்பது
ஆண் : உன்னை பார்க்கும்போது தான் நூறு மடங்கு கூடுது
பெண் : வெட்கம் பாதி சொர்க்கம் பாதி மாறி மாறி வந்து போனது ஆஆ…