menu-iconlogo
logo

Sollividu Velli Nilave

logo
Lirik
படம் : அமைதிப்படை

பாடியவர்கள் : மனோ ஸ்வர்ணலதா

இசை : இளையராஜா

ஆண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே

சொல்லுகின்ற செய்திகளையே

பெண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே

சொல்லுகின்ற செய்திகளையே

ஆண் : உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..

கனவுகள் கலைந்ததம்மா

காதல் என்னும் தீபமே

கண்ணில் நானும் ஏற்றினேன்

காற்றில் கலைந்து போன பின்

நானே என்னை தேற்றினேன்

பெண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே

சொல்லுகின்ற செய்திகளையே

உறவுகள் கசந்திடும்மா..ஓ..ஓ..

கனவுகள் கலைந்திடும்மா

பெண் : உன்னை ஒரு போதும்

உள்ளம் மறவாது

நான் தான் வாழ்ந்தேன்..

ஓ..ஓ..ஓ..ஓ

பெண் : குற்றம் புரியாது

துன்பக்கடல் மீது

ஏன் நான் வீழ்ந்தேன்..

ஓ..ஓ..ஓ..ஓ

ஆண் : அந்த கதை முடிந்த கதை

எந்தன் மனம் மறந்த கதை

என்ன செய்ய விடுகதை போல்

என்னுடைய பிறந்த கதை

ஆண் : காலங்கள் தான்

போன பின்னும்

காயங்கள் ஆறவில்லை..ஓ..

வேதனை தீரவில்லை

பெண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே

சொல்லுகின்ற செய்திகளையே

உறவுகள் கசந்திடும்மா..ஓ..ஓ..

கனவுகள் கலைந்திடும்மா

உறவுகள் கசந்திடும்மா..ஓ..ஓ..

கனவுகள் கலைந்திடும்மா

ஆண் : தொட்ட குறையாவும்

விட்ட குறையாகும்

வேண்டாம் காதல்..

ஓ..ஓ..ஓ..ஓ

ஆண் : எந்தன் வழி வேறு

உந்தன் வழி வேறு

ஏனோ கூடல்

ஓ..ஓ..ஓ.ஓ.

பெண் : உன்னுடைய வரவை எண்ணி

உள்ளவரை காத்திருப்பேன்

என்னைவிட்டு விலகிச் சென்றால்

மறுபடித் தீக்குளிப்பேன்

பெண் : நான் விரும்பும் காதலனே

நீ என்னை ஏற்றுக் கொண்டால்

நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்

ஆண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே

சொல்லுகின்ற செய்திகளையே

உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..

கனவுகள் கலைந்ததம்மா

பெண் : காதல் என்னும் தீபமே

கண்ணில் நானும் ஏற்றினேன்

காற்றில் கலைந்து போகுமா

நெஞ்சில் வைத்து ஏற்றினேன்

ஆண் : சொல்லிவிடு வெள்ளி நிலவே

சொல்லுகின்ற செய்திகளையே

உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..

கனவுகள் கலைந்ததம்மா

பெண் : உறவுகள் கசந்திடும்மா..ஓ..ஓ..

கனவுகள் கலைந்திடும்மா

Sollividu Velli Nilave oleh Mano - Lirik & Cover