ஆ: மச்சானை வச்சுக்கடி
முந்தானை முடிச்சுலதான்..
மச்சானை வச்சுக்கடி
முந்தானை முடிச்சுலதான்..
உன் மேல ஆசை வச்சேன்..
வேறெதுக்கு மீசை வச்சேன்.. ஹேய்.
பெ: மச்சானை முடிஞ்சுக்கிட்டா
முந்தானை அவுந்துவிடும்..
மச்சானை முடிஞ்சுக்கிட்டா
முந்தானை அவுந்துவிடும் ..
அம்மாடி ஆகாது..
என் மனசு கெட்டுவிடும்..
ஆ: மச்சானை (பெ: ஆஹா..)
வச்சுக்கடி (பெ: ஆஹா..)
முந்தானை முடிச்சுலதான்..
ஆ: காவாங்கரையிலே கானங்குருவிங்க
சத்தமிட்டு முத்தமிட்டது..
பெ: சோடி சேருமோ சேட்டை பண்ணுமோ..
பட்டு வந்து ஒட்டி நிக்குது..
ஆ: வாடி என் பக்கத்துல..
வயசுக்கு வந்த புள்ள…
பெ: மாட்டேன்னா சொல்லப்போறேன்..
மெதுவாத்தான் நானும் வாரேன் ..
ஆ: சித்தாட கொண்டாடும் சின்னக்குட்டி..
பெ: ஆ..இன்னும் நான் தின்னாத
வெல்லக்கட்டி ஹேய் ..
ஆ: மச்சானை வச்சுக்கடி
முந்தானை முடிச்சுலதான்..
பெ: அம்மாடி ஆகாது..
என் மனசு கெட்டுவிடும்..
ஆ: மச்சானை வச்சுக்கடி
முந்தானை முடிச்சுலதான்..
ஆ: ஏறப்பூட்டனும் நீரைப் பாய்ச்சணும்
சொந்தமுள்ள காணியிருந்தா..
பெ: மேளம் கொட்டணும் தாலி கட்டணும்
மாமனுக்கு ஆசையிருந்தா..
ஆ: கண்ணாலம் கட்டும் வர..
கொட்டட்டும் காதல் மழ..
பெ: தெரியாதா உன்னப்பத்தி
வாராதே என்னச்சுத்தி..
ஆ: அங்கங்கே அங்கம் தான் மின்ன மின்ன..
பெ: ஆஹா..அள்ளாம கொள்ளாம என்ன பண்ண ஹோய்..
ஆ: மச்சானை வச்சுக்கடி
முந்தானை முடிச்சுலதான்..
உன் மேல...ஹ.. ஆசை வச்சேன்..ஏ..
வேறெதுக்கு ... மீசை வச்சேன்.. ஹேய்.
பெ: மச்சானை (ஆ: ஏ ஹே..)
முடிஞ்சுக்கிட்டா (ஆ: ஆஹா....)
முந்தானை அவுந்துவிடும்..(ஆ: ஐயோ....)
அம்மாடி ஆகாது..
என் மனசு கெட்டுவிடும்..
ஆ: மச்சானை (பெ:ஆஹா..)
வச்சுக்கடி (பெ:ஆஹா..)
முந்தானை முடிச்சுலதான்..