சின்ன சின்ன கண்ணிலே
பின்னி வைத்த கூந்தலில்
முல்லை பூவை சூடினால்
கன்னி நடை பின்னல் போடுமா
சிறு
மின்னலிடை பூவை தாங்குமா
பின்னி வைத்த கூந்தலில்
முல்லை பூவை சூடினால்
கன்னி நடை பின்னல் போடுமா
சிறு
மின்னலிடை பூவை தாங்குமா
மின்னலிடை
வாடினால்
கன்னி உந்தன் கையிலே
அன்னம் போல
சாய்ந்து கொள்ளுவேன்
அதில்
அந்தி பகல்
பள்ளி கொள்ளுவேன்
சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும்
யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க
யாரை எண்ணி பாடுது
சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும்
யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க
யாரை எண்ணி பாடுது
வளர்ந்த கலை மறந்து விட்டாள்
தினம் தினம் ஏன்
கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா
தினம் தினம் ஏன்
கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா
அவள் தேவை என்ன
ஆசை என்ன
கேளடா கண்ணா
அவள் தேவை என்ன
ஆசை என்ன
கேளடா கண்ணா
நினைப்பதெல்லாம்
வெளியில் சொல்ல
முடியுமா கண்ணா
நினைப்பதெல்லாம்
வெளியில் சொல்ல
முடியுமா கண்ணா
அதை நீ பிறந்த
பின்பு கூற
இயலுமா கண்ணா
வளர்ந்த கலை
மறந்து விட்டாள்
கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த
ஓவியத்தை
பாரடா கண்ணா
இன்று வரை
நடந்ததெல்லாம்
போகட்டும் கண்ணா
இன்று வரை
நடந்ததெல்லாம்
போகட்டும் கண்ணா
இனி என்னிடத்தில்
கோபமின்றி
வாழச் சொல்
கண்ணா
இனி என்னிடத்தில்
கோபமின்றி
வாழச் சொல்
கண்ணா
அவரில்லாமல்
எனக்கு வேறு
யாரடா கண்ணா
அவரில்லாமல்
எனக்கு வேறு
யாரடா கண்ணா
நான் அடைக்கலமாய்
வந்தவள்தான்
கூறடா கண்ணா
வளர்ந்த கலை
மறந்து விட்டாள்
கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த
ஓவியத்தை
பாரடா கண்ணா
வாராயோ வெண்ணிலாவே
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள்
கதையே
வாராயோ வெண்ணிலாவே
வாக்குரிமை தந்த
பதியால்
வாழ்ந்திடவே வந்த
சதி நான்
வாக்குரிமை தந்த
பதியால்
வாழ்ந்திடவே வந்த
சதி நான்
நம்பிடச் செய்வார்
நேசம்
நடிப்பதெல்லாம் வெளி
வேஷம்
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள்
கதையே
வாராயோ வெண்ணிலாவே
தன் பிடிவாதம்
விடாது
என் மனம் போல்
நடக்காது
தன் பிடிவாதம்
விடாது
என் மனம் போல்
நடக்காது
நமக்கென எதுவும்
சொல்லாது
நம்மையும் பேச
விடாது
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள்
கதையே
வாராயோ வெண்ணிலாவே
மையேந்தும் விழியாட
இளங்காதல் வயதாலே
தனியாகினேன்
அந்த இளவேனில் நிலவாலே
கனியாகினேன்
இமை மூடி தூங்காமல்
போராடினேன்
உந்தன் இதழோடு
இதழ் வைத்து
சீராடினேன்
கண் மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட
நான் ஆடுவேன்...
பாட்டு பாடவா
மேகவண்ணம் போல மின்னும்
ஆடையினாலே
மலை மேனியெல்லாம் மூடுதம்மா
நாணத்தினாலே
மேகவண்ணம் போல மின்னும்
ஆடையினாலே
மலை மேனியெல்லாம் மூடுதம்மா
நாணத்தினாலே
பக்கமாக வந்த பின்னும்
வெட்கம் ஆகுமா
இங்கே பார்வையோடு பார்வை சேர
தூது வேண்டுமா
பக்கமாக வந்த பின்னும்
வெட்கம் ஆகுமா
இங்கே பார்வையோடு பார்வை சேர
தூது வேண்டுமா
மாலை அல்லவா
நல்ல நேரம் அல்லவா
இன்னும் வானம் பார்த்த
பூமி போல வாழலாகுமா
பாட்டு பாடவா
பார்த்து பேசவா
பாடம் சொல்லவா
பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த
பாவை அல்லவா
நானும் பாதை தேடி
ஓடி வந்த
காளை அல்லவா
பாட்டு பாடவா
பார்த்து பேசவா
பாடம் சொல்லவா
பறந்து செல்லவா