menu-iconlogo
logo

Vella Manam Ulla Machan

logo
Testi
பெ: வெள்ளை மனம் உள்ள மச்சான்

விழியோரம் ஈரம் என்ன

பக்கத்திலே நானிருந்தும்..

துக்கத்திலே நீ இருந்தா..

கரைசேரும் காலம் எப்போ..

வெள்ளை மனம் உள்ள மச்சான்

விழியோரம் ஈரம் என்ன..

ஆ: கள்ள மனம் முள்ளு தச்சி..

கண்ணீரில் மூழ்குதடி

வெட்கத்திலே நான் அழுதேன்

துக்கத்திலே.. நீ அழுத

கர சேரும் காலம் எப்போ..

கள்ள மனம் முள்ளு தச்சி

கண்ணீரில் மூழ்குதடி..

ஆ: செங்கரும்பை நான் மறந்து

வேலி முள்ளை ஏன் கடிச்சேன்

பெ: பூவுக்குள்ளும் நாகம் உண்டு

சாமிக்கும் தான் வீடு ரெண்டு

ஆ: கள்ளையும் பாலா நீ நினைச்சே

முள்ளையும் பூவா நீ முடிச்சே

பெ: போனதெல்லாம் போகட்டுங்க

யாருமிங்கே ராமனில்லே

ஆ: வெள்ளை மனம் உள்ள மச்சான்

பெ: விளையாடி ஓஞ்சி வந்தான்

ஆ: பக்கத்திலே நீ இருந்தா..

பெ: சொர்க்கத்திலே நான் மிதப்பேன்

ஆ: என்னாளும் சேர்ந்திருப்பேன்

வெள்ளை மனம் உள்ள மச்சான்

பெ: விளையாடி ஓஞ்சி வந்தான்

இனிய இப்பாடலை (HQ) வடிவில் விலை கொடுத்து

இப்பாடலை பதிவிறக்குவதும்,

மீள்பதிவேற்றம் செய்வதும்

கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!

பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!

பெ: கூடுவிட்டு போனகிளி

ஜோடி கிட்டே சேர்ந்ததம்மா

ஆ: ஜோடி வந்து.. சேர்ந்த கிளி

கோடி சுகம் காணுதம்மா

பெ: சிப்பிய போல நானிருந்து

சிந்திய தேனை சேர்த்து வச்சேன்

ஆ: என் குணத்தில் பைய வந்தால்

இன்னும் கொஞ்சம் தொல்லையடி

வெள்ளை மனம் உள்ள மச்சான்

பெ: விளையாடி ஓஞ்சி வந்தான்

ஆ: பக்கத்திலே நீ இருந்தா

பெ: சொர்க்கத்திலே..ஏ.. நான் மிதப்பேன்

ஆ: என்னாளும் சேர்ந்திருப்பேன்

வெள்ளை மனம் உள்ள மச்சான்

பெ: விளையாடி ஓஞ்சி வந்தான்

Vella Manam Ulla Machan di Ilayaraja - Testi e Cover