வெண்ணிலவே வெண்ணிலவே - Vennilave Vennilave - Pottu Amman (2000)
பாடகர்கள்: SPB சரண், தேனீ குஞ்சரம்மாள், ஸ்வர்ணலதா, ஹரிணி & கல்பனா
பாடல் வரிகள்: பிறைசூடன், R.V.உதயகுமார், நா. முத்துகுமார், கஸ்தூரி ராஜா
இசை: S.D.சாந்தகுமார்
தமிழ் வரிகளுடன்
HQ Track வழங்குவது
PVSings / PaadumVanambaadi
(இசை) Track by PVSings
(F) வெண்ணிலவே வெண்ணிலவே...
சின்னஞ்சிறு அன்னமே
அன்னை பெற்ற ஸ்வர்ணமே
அன்பில் வந்த சின்னமே
எந்.தன் பஞ்சவர்ணமே
மலர்விழி மூடி...
நீ உறங்கிடு மானே...
தந்தை மடி கூட..
உன் தாய் மடி தானே..
வெண்ணிலவே வெண்ணிலவே...
PVSings / PaadumVanambaadi
(தாலாட்டு)
(F) ஆரா..ரோ ஆ...ராரோ
ஆரா..ரோ ஆரிரரோ..
ஆரா...ரோ
(M) வானத்தில் இருந்து
வானவில் எடுத்து
வண்ண வண்ணமாய்
ஒரு பாய் தரவா
(F) பூங்குயில் இனத்தை
நான் தத்து எடுத்து
பாட்டொன்று
சொல்லச்சொல்லி
நான் சொல்லவா
(M) உந்தன் மழலை
மொழி வழியே..
நம் தமிழ் புது சேலை கட்டும்..
பிஞ்சு விரல்களின்
தாளத்திலே..
பஞ்சு மேகங்கள்
தலை அசைக்கும்..
(F) அரும்பே அரும்பே
அழுவது எதற்கு
குயிலாய் பறக்க சிறகு வரும்
கரும்பாய் குறும்பாய்
உன்தாய் மடியில்
இனிதாய் தவழும்
நேரம் வரும்
அள்ளி பூவிழி நீ உறங்க
இரு தாமரை போர்வை தரும்..
வெண்ணிலவே வெண்ணிலவே...
ஆஆஆஆஆ..
(இசை) Track by PVSings
(F) ஆஆஆஆஆ..
பாவையை அணைத்து
பா..தியைக் கொடுத்து
உள்ளம் ரெண்டும் கலந்ததை
நான் சொல்லவா..
பஞ்சணையில் உன்னையே
நெஞ்சில் தினம் எண்ணியே
கற்பனையில் முக்குளித்த
கதை சொல்லவா
உந்தன் புன்னகை மந்திரத்தில்..
ஒரு தெய்வத்தை காட்டி விடு..
அன்பு மழலையை தூது விட்டு..
அன்னை உள்ளத்தை மா..ற்றி விடு
உயிரில் உயிரை
வளர்த்தவள் அவளே
உறவில் நீ ஒரு பாலமிடு..
கருவில் உறவை
கொடுத்ததும் அவளே
ஒருநாள் அணைப்பாள்
கவலை விடு
மயில் தோகையும் நீ உறங்க
தினம் சாமரம் வீச வரும்
வெண்ணிலவே வெண்ணிலவே...
சின்னஞ்சிறு அன்னமே
அன்னை பெற்ற ஸ்வர்ணமே
அன்பில் வந்த சின்னமே
எந்..தன் பஞ்சவர்ணமே
மலர்விழி மூடி...
நீ உறங்கிடு மானே...
தந்தை மடி கூட..
உன் தாய் மடி தானே..
வெண்ணிலவே வெண்ணிலவே...
வெண்ணிலவே வெண்ணிலவே...
Brought to you by PVSings/PaadumVanambaadi
Thanks for using my Track!