menu-iconlogo
huatong
huatong
avatar

Maanam Idi Idikka

Swarnalathahuatong
sailaways61huatong
Testi
Registrazioni
படம்:உன்ன நெனச்சேன் பாட்டு படுச்சேன்.

இசை:இளையராஜா

பாடியவர்கள்: எஸ்பிபி,

S.ஜானகி அம்மா

ஆண்: மானம் இடிக்க இடிக்க மத்தளங்கள்

சத்தம் இட ராசாதி ராசா தொடுத்த மாலை தான்

இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலை தான்

மானம் இடிக்க இடிக்க மத்தளங்கள்

சத்தம் இட ராசாதி ராசா தொடுத்த மாலை தான்

இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலை தான்

நெனச்சது பலிச்சதம்மா

எனக்கது கிடைச்சதம்மா

என்னம்மா சொல்லம்மா

கண்ணம்மா..ஆ.. கையதொட்டு

பெண்: மானம் இடிக்க இடிக்க மத்தளங்கள்

சத்தம் இட ராசாதி ராசா தொடுத்த மால தான்

இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மால தான்..ஆ

பெண்: சின்ன சின்ன ஆசை

என்ன தொட்டு பேச

கன்னி மனம் கூச

அங்க காதல் வாசம் வீச

இது காமன் போட்ட பூஜை..

ஆண்: மொட்டு மல்லி மாலை

கட்டி வச்ச வேலை

பட்டுக்கூர சேலை

தொட்டு கட்டி பாக்கும் சோள

மேளம் கொட்டி பாடும் வேலை

பெண்: ஆளான..

அழகான கொடிதானைய்யா..ஆஆ

அதில் பூத்த புது பூவில்

தேன் தானய்யா..

ஆண்: தேன்அள்ளி..

நாணுன்ன திரையேனம்மா..ஆ

திரளான சுகம் காட்டும்

கரை நானம்மா..

பெண்: வெட்கமா, சொர்க்கமா

விட்டுட்டு செல்லம்மா

பக்கமா வந்துதான்

மொத்தமா.. பலன்தரும்

மானம் இடிக்க இடிக்க

மத்தளங்கள்

சத்தம் இட ராசாதி ராசா

தொடுத்த மாலை தான்

இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலை தான்

நெனச்சது பளிச்சத்தையா

எனக்கது கிடைச்சதைய்யா

என்னய்யா சொல்லய்யா

கண்ணம்மா..ஆ கையதொட்டு..

ஆண்: மானம் இடிக்க இடிக்க

மத்தளங்கள்

சத்தம் இட ராசாதி ராசா

தொடுத்த மாலை தான்

இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலை தான்..

ஆண்: பொன்னுமணி பூட்டி

பூவிலங்கு சூட்டி

கன்னி வரும் நேரம் அப்ப

தன்னால் தீரும் பாரம்

அதன் பின்னால் போதையேறும்..

பெண்: கட்டிலுக்கு மேல

ரெட்டைக்கிளி போல

ஒட்டி நின்னு பாடும்

இளவட்டம் மோகம் தேடும்

அதில் சொர்க்கம் நேரில் கூடும்..

ஆண்: வாழ்நாளில் நினைக்காத

புது நாளிது..

தானாக கலையாத கலை தானிது

பெண்: தேனோடு திணையாக

இணையானது..

மார்போடு மானாக துணையானது

ஆண்: எண்ணம்தான் துள்ளுது

என்னமோ சொல்லுது

கண்ணம்மா வண்ணம்மா

இன்பமா..ஆ.. பொங்கி வரும்

ஆண்: மானம் இடிக்க இடிக்க

மத்தளங்கள்

சத்தம் இட ராசாதி ராசா

தொடுத்த மாலை தான்

பெண்: இந்த ராசாத்தி

தோளில் முடிச்ச மாலை தான்

ஆண்: நெனச்சது பலிச்சதம்மா

எனக்கது கிடைச்சதம்மா...

பெண்: என்னய்யா சொல்லய்யா

கண்ணம்மா..ஆ.. கையதொட்டு...

பெண்: மானம் இடிக்க இடிக்க மத்தளங்கள்

சத்தம் இட, ராசாதி ராசா தொடுத்த மால தான்

ஆண்: இந்த ராசாத்தி

தோளில் முடிச்ச மாலை தான்..ஆஆ..

Altro da Swarnalatha

Guarda Tuttologo