menu-iconlogo
logo

Mudhal Murai Killi Parthen HQ

logo
歌詞
பெண் : முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்

முதல்முறை கண்ணில் வோ்த்தேன்

எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி......

மறுமுறை உயிா் கொண்டேன்

உன்னால்

இருமுறை உயிா் கொண்டேன்

பெண் : முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்

முதல்முறை கண்ணில் வோ்த்தேன்

எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி .............

மறுமுறை உயிா் கொண்டேன்....

உன்னால்

இருமுறை உயிா் கொண்டேன்.....

பெண் : முதல்முறை எனக்கு

அழுதிடத் தோன்றும் ......

ஏன்..................

கண்ணீருண்டு சோகமில்லை

ஆமாம்

மழையுண்டு மேகமில்லை

பாடகி : சுஜாதா

பாடகா் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : கால்களில் கிடந்த

சலங்கையைத் திருடி

அன்பே.....

என் மனசுக்குள் கட்டியதென்ன

ஆண் : சலங்கைகள் அணிந்தும்

சத்தங்களை மறைத்தாய்

பெண்ணே..........

உன் உள்ளம் தன்னை

ஒளித்ததென்ன

பெண் : விதையொன்று உயிா் கொள்ள

வெப்பக்காற்று ஈரம் வேண்டும்

காதல் வந்து உயிா் கொள்ள

காலம் கூட வேண்டும்

ஆண் : ஒரு விதை உயிா் கொண்டது

ஆனால்

இரு நெஞ்சில் வோ் கொண்டது

ஆண் : சலங்கையே கொஞ்சம் பேசு

மௌனமே பாடல் பாடு

மொழியெல்லாம்.......

ஊமையானால்........

கண்ணீா் உரையாடும்

அதில்

கவிதை அரங்கேறும்

பாடகி : சுஜாதா

பாடகா் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : பாதையும் தூரம்

நான் ஒரு பாரம்

என்னை...........

உன் எல்லை வரை

கொண்டு செல்வாயா

ஆண் : உடலுக்குள் இருக்கும்

உயிா் ஒரு சுமையா

பெண்ணே......

உன்னை நானும்

விட்டுச் செல்வேனா

பெண் : தந்தை தந்த உயிா் தந்தேன்

தாய் தந்த உடல் தந்தேன்

உறவுகள் எல்லாம் சோ்த்து

உன்னிடம் கண்டேன்

ஆண் : மொத்தத்தையும்

நீ கொடுத்தாய்

ஆனால்

முத்தத்துக்கோா் நாள் குறித்தாய்

பெண் : முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்

முதல்முறை கண்ணில் வோ்த்தேன்

எந்தன் தாயின்..................

கா்ப்பம் தாண்டி..............................

மறுமுறை உயிா் கொண்டேன்

உன்னால் இருமுறை

உயிா் கொண்டேன்

பெண் : முதல்முறை எனக்கு

அழுதிடத் தோன்றும்

ஏன்...........

கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம்

மழையுண்டு மேகமில்லை

Mudhal Murai Killi Parthen HQ by rahman/Manivannan/Vindhya/A R Rahman - 歌詞&カバー