menu-iconlogo
huatong
huatong
avatar

Nillaatha vennila Nillu AAn azhagan

Prashanthhuatong
sict2asdhuatong
가사
기록

(ஆ) நில்லாத வெண்ணிலா

நில்லு நில்லு என் காதலி

சொல்லாத பொன்மொழி

சொல்லு சொல்லு உன் கண்வழி

நில்லாமலே நீ போவதேன்

சொல்லாமலே நான் நோவதேன் ஏன்

(பெ) நில்லாத வெண்ணிலா

நில்லு நில்லு என் வாசலில்

சொல்லாத பொன் மொழி

சொல்லு சொல்லு உன் பார்வையில்

சரணம் 1

கல் இதயம் படைத்தவர்களையும்

கறைய வைக்கும் என் தாய் ராஜாவின்

புல்லாங்குழல் ,வயலின் ஷெஹ்னாய்

(ஆ) மான் துள்ளும் மலையாட

பின்னெழும் சித்திரமே சித்திரமே

வாழையும் இள நீரையும்

கொண்ட நன்னிலமே நன்னிலமே

(பெ) கேரளக் குயில் கூவிடும்

இசை தித்தித்ததோ தித்தித்ததோ

ஆவணி திருவோணத்தில் என்னை

சந்தித்ததோ சந்தித்ததோ

(ஆ)பொன்னல்லோ சிறு பூவல்லோ

மெல்ல தொடவோ என்னை தரவோ

(பெ) தேனல்லோ பசும் பாலல்லோ

பக்கம் வரவோ நான் தரவோ

(ஆ)செம்மீன்கள் துள்ளுதே

இங்கும் அங்கும் கண்ணோடையில்

(பெ)சந்தோஷம் பொங்குதே

முன்னும் பின்னும் உன் கூடலில்

நான் சொல்லவோ சிறு பூ அல்லவோ

(ஆ) நில்லாத வெண்ணிலா

நில்லு நில்லு என் காதலி

சொல்லாத பொன்மொழி

சொல்லு சொல்லு உன் கண்வழி

(பெ)நில்லாமலே நீ போவதேன்

சொல்லாமலே நான் நோவதேன் ஏன்

(ஆ) நில்லாத வெண்ணிலா

நில்லு நில்லு என் காதலி

சொல்லாத பொன்மொழி

சொல்லு சொல்லு உன் கண்வழி

சரணம் 2 இதுல என்ன இசை பொக்கிஷமோ?

(பெ) நீ வர எதிர்பார்த்தது இந்த

நந்தவனம் நந்தவனம்

நீ தொட என்று பூத்தது இந்த

செங்கமலம் செங்கமலம்

(ஆ) காமனின் கலை காண்பது இந்த

அந்தப்புறம் அந்தப்புறம்

பூமரக்குயில் பூவது

இங்கு சப்தஸ்வரம் சப்தஸ்வரம்

(பெ) மஞ்சமே இந்த நெஞ்சமே

சுகம் பஞ்சமோ இல்லை கொஞ்சமோ

(ஆ)உள்ளமே இன்ப வெள்ளமே

உன்னை அள்ளவோ அள்ளி செல்லவோ

(பெ)அன்றாடும் சேர்வது

மன்ன மன்ன உன் பொன்மடி

(ஆ)என்னாளும் இன்பமே

நீயே நீயே என் பைங்கிளி

பூ மங்கையே பொங்கிடும் கங்கையே

(பெ)நில்லாத வெண்ணிலா

நில்லு நில்லு உன் வாசலில்

சொல்லாத பொன் மொழி

சொல்லு சொல்லு உன் பார்வையில்

(ஆ)நில்லாமலே நீ போவதேன்

சொல்லாமலே நான் நோவதேன் ஏன்

(பெ)நில்லாத வெண்ணிலா

நில்லு நில்லு உன் வாசலில்

சொல்லாத பொன் மொழி

சொல்லு சொல்லு உன் பார்வையில்

Prashanth의 다른 작품

모두 보기logo