menu-iconlogo
logo

Sorkkame Endralum (Short Ver.)

logo
Lirik
ஏரிக்கர காத்தும்

ஏலேலேலோ பாட்டும்

இங்கே ஏதும் கேட்கவில்லையே

பாடும் குயில் சத்தம்

ஆடும் மயில் நித்தம்

பார்க்க ஒரு சோலையில்லையே

வெத்தலைய மடிச்சு

மாமன் அதக் கடிச்சு

துப்ப ஒரு வழியில்லையே

ஓடி வந்து குதிச்சு

முங்கி முங்கிக் குளிச்சு

ஆட ஒரு ஓடையில்லையே

இவ்வூரு என்ன ஊரு

நம்மூரு ரொம்ப மேலு

அட ஓடும் பல காரு

வீண் ஆடம்பரம் பாரு

ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு

சொர்கமே என்றாலும்

அது நம்மூரப் போல வருமா

அட எந்நாடு என்றாலும்

அது நம் நாட்டுக் கீடாகுமா

பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்

தமிழ் போல் இனித்திடுமா

சொர்கமே என்றாலும்

அது நம்மூரப் போல வருமா

அட எந்நாடு என்றாலும்

அது நம் நாட்டுக் கீடாகுமா