menu-iconlogo
huatong
huatong
avatar

PachaiKili Muthucharam

P. Susheelahuatong
robertwskihuatong
Letra
Gravações
பச்சை கிளி முத்து சரம்

முல்லை கோடி யாரோ

பச்சை கிளி முத்து சரம்

முல்லை கோடி யாரோ,

பாவை என்னும் தேரில் வரும்

தேவன் மகள் நீயோ....

பொன்னின் நிறம் பிள்ளை மனம்

வள்ளல் குணம் யாரோ ஆ...ஆ.....ஆ....

பொன்னின் நிறம் பிள்ளை மனம்

வள்ளல் குணம் யாரோ

மன்னன் என்னும் தேரில் வரும்

தேவன் மகன் நீயோ,

பொன்னின் நிறம் பிள்ளை மனம்

வள்ளல் குணம் யாரோ

மன்னன் என்னும் தேரில் வரும்

தேவன் மகன் நீயோ....

தத்தை போல தாவும் பாவை

பாதம் நோகும் என்று

மெத்தை போல பூவை தூவும்

வாடை காற்றும் உண்டு

வண்ண சோலை வானம் பூமி

யாவும் இன்பம் இங்கு

இந்த கோலம் நாளும் காண

நானும் நீயும் பங்கு,

கண்ணில் ஆடும் மாங்கனி

கையில் ஆடுமோ,

கண்ணில் ஆடும் மாங்கனி

கையில் ஆடுமோ,

நானே தரும் நாளும் வரும்

ஏனிந்த அவசரமோ...

பச்சை கிளி முத்து சரம்

முல்லை கோடி யாரோ,

பாவை என்னும் தேரில் வரும்

தேவன் மகள் நீயோ....

மெல்லபேசும் கள்ள பார்வை

ஜாதி பூவின் மென்மை,

சொல்ல போகும் பாடல் நூறும்

ஜாடை காட்டும் பெண்மை,

முள்ளில்லாத தாளை போல

தோகை மேனி என்று

அல்லும் போது மேலும் கீழும்

ஆடும் ஆசை உண்டு,

அந்த நேரம் நேரிலே

சொர்க்கம் தோன்றுமோ,

அந்த நேரம் நேரிலே

சொர்க்கம் தோன்றுமோ,

காணாததும் கேளாததும்

காதலில் விளங்கிடுமோ,

பொன்னின் நிறம் பிள்ளை மனம்

வள்ளல் குணம் யாரோ,

மன்னன் என்னும் தேரில் வரும்

தேவன் மகன் நீயோ....

பொன் பட்டாடை மூடி செல்லும்

தேன் சிட்டோடு மெல்ல,

நான் தொட்டாடும் வேலை தோறும்

போதை என்ன சொல்ல,

கை தொட்டாட காலம் நேரம்

போக போக உண்டு,

கண் பட்டாலும் காதல் வேகம்

பாதி பாதி இன்று,

பள்ளிக்கூடம் போகலாம் பக்கம் ஓடி வா

பள்ளிக்கூடம் போகலாம் பக்கம் ஓடி வா,

கூடம் தன்னில் பாடம் பெரும்

காலங்கள் சுவையல்லவோ,

பொன்னின் நிறம் பிள்ளை மனம்

வள்ளல் குணம் யாரோ,

மன்னன் என்னும் தேரில் வரும்

தேவன் மகன் நீயோ,

பச்சை கிளி முத்து சரம்

முல்லை கோடி யாரோ

பாவை என்னும் தேரில் வரும்

தேவன் மகள் நீயோ......

இருவரும்: ஹ ஹ ஹ ஹ.......ஹோ ஹோ ஹோ ஹோ....

ல ல ல ல ல லா லா....

ஹ ஹ ஹ ஹ.......ஹோ ஹோ ஹோ ஹோ....

ல ல ல ல ல லா லா....

Mais de P. Susheela

Ver todaslogo